Elukathir Online Edition

Home

Archives

Contact Us

Latest News in Sri Lanka
ஆண்களின் வருமானமும் அல்லாஹ்வின் அபிவிருத்தியும்

[Friday 19th February 2016]

இஸ்லாமியக் குடும்பவியலில் ஆண்கள் நிர்வாகம் செய்யும் பொறுப்பை ஏற்றிருக்கிறார்கள் என்பதையும், பொருளாதாரப் பிரச்சனை கள் அனைத்திற்கும் ஆண்களே பொறுப்பாளர்கள் என்பதையும் இதுவரை நாம் பார்த்துள்ளோம். குடும்ப நிர்வாகத்தை ஏற்று வழிநடத்துகிற ஆண்கள் எந்தக் கட்டத்திலும் தங்களது மனைவிமார் களை வேலைக்கு அனுப்பி, அவர்களுக்கு இரட்டைச் சுமையை சுமத்தி, அவர்களது இயல்புக்கு மாறான சிரமங்களையும் கஷ்டங்களை யும் கொடுத்துவிடக் கூடாது.

அந்தக் கஷ்டங்களை நாமே சுமந்து கொண்டு, அவர்களைச் சிறந்த முறையில் கவனிக்க வேண்டும் என்பதற்குரிய பல காரணங்களைப் பார்த்தோம். பொதுவாக முஸ்லிம்கள் பெண்களை வேலைக்கு அனுப்பக் கூடாது என்பதில் மற்றவர்களை விடவும் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இருவரின் சம்பாத்தியமும் சேர்ந்து கிடைத்தால் தற்போது வாழ்வதை விடவும் செழிப்பாக வாழலாம் என்பதே வேலைக்கு அனுப்புபவர்களின் மனநிலையாக உள்ளது. இதில் காசு பணம் சம்பாதிப்பதைத் தவிர வேறு எந்த நோக்கமும் இருப்பதாகத் தெரியவில்லை.

ஆண் போன்று இன்னொரு மடங்கு பெண்களின் சம்பாத்தியத்தின் மூலம் கிடைத்தால் சொத்து சுகங்களைச் சேர்த்துக் கொள்ளலாம், வசதிகளைப் பெருக்கிக் கொள்ளலாம் என்பதுதான் பெண்களை வேலைக்கு அனுப்புபவர்களின் அடிப்படை நோக்கமாக இருக்கிறது.


  Related Articles
 Comments
Name *
Email *
Comments