Elukathir Online Edition

Home

Archives

Contact Us

Latest News in Sri Lanka
மனித வாழ்வு: ஓர் இஸ்லாமிய நோக்கு

[Friday 19th February 2016]

மனித வாழ்வு: ஓர் இஸ்லாமிய நோக்கு இஸ்லாம் தனிப்பட்ட, குடும்ப, சமூக வாழ்க்கைக்கும் சமூக உறவுகளுக்கும் நிதி, நீதி, நிர்வாகம் உட்பட மனித வாழ்வின் எல்லாத் துறைகளுக்குமான பரிபூரண வழிகாட்டல்களைக் கொண்ட மார்க்கம். உலக, மறுமை வாழ்க்கை பற்றிய இஸ்லாத்தின் கண்ணோட்டம் அற்புதமானது.

இஸ்லாம் மறுமை வாழ்க்கைக்காக உலக வாழ்வைத் துறக்குமாறு வலியுறுத் தவில்லை. மறுமை வாழ்க்கையை மறந்து விட்டு உலக வாழ்க்கையை அனுபவிக்குமாறு சொல்லவுமில்லை. ஏக காலத்தில் ஈருலக வாழ்வையும் வெற்றிகரமாக அமைத்துக் கொள்வதற்குத் தேவையான எல்லா வழிகாட்டல்களையும் இஸ்லாம் நிறைவாகவே வழங்கியிருக்கிறது.

ஸூரதுல் ஜுமுஆவில் அல்லாஹுத் தஆலா கடைத் தெருவிலுள்ளவர்களை, காரியாலயத்திலுள்ளவர்களை, உலக விவகாரங்களில் ஈடுபட்டிருப்பவர்களை விளித்து இப்படிச் சொல்கின்றான்:

"விசுவாசிகளே! ஜுமுஆ தினத்தன்று தொழுகைக்காக அழைக்கப்பட்டால், வர்த்தகத்தை விட்டுவிட்டு அல்லாஹ்வைத் தியானிக்க நீங்கள் விரைந்து செல்லுங்கள். நீங்கள் அறிவுடையோர்களாயிருந்தால் இதுவே உங்களுக்கு மிக நன்று."(ஸூரதுல் ஜுமுஆ: 09)


  Related Articles
 Comments
Name *
Email *
Comments