Elukathir Online Edition

Home

Archives

Contact Us

Latest News in Sri Lanka
மாசுபட்ட காற்றை சுவாசித்தால் உடல் எடை அதிகரிக்கும் : ஆய்வில் தகவல்

[Friday 18th March 2016]

மாசுபட்ட காற்றை சுவாசித்தால் உடல் எடை அதிகரிக்கும் என அமெரிக்காவை சேர்ந்த டியூக் பல்கலைக்கழக நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. உலகில் தொழிற்சாலைகள் அதிக அளவில் உள்ள சீன தலைநகர் பெய்ஜிங்கில்,

காற்றில் புகை கலந்த அதிக அளவு மாசு ஏற்படுகின்றமை யாவரும் அறிந்ததே!இந்நிலையில், பெய்ஜிங்கில் மாசுபட்ட காற்றை சுவாசித்த கர்ப்பிணி எலிகளை பிடித்து வந்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

அவற்றில் மாசு பட்ட காற்றை சுவாசித்த எலிகளின் நுரையீரல் மற்றும் கல்லீரல் திசுக்களில் வீக்கமும், அலர்ஜியும் ஏற்பட்டமை கண்டறியப்பட்டது. மேலும், உடலில் கொழுப்பு சத்தும் அதிகரித்து எடை அதிகரித்து இருந்தது.அதே நேரத்தில் மாசு படாத காற்று பகுதியில் வாழ்ந்த எலிகளிடம் நடத்திய சோதனையில் இது போன்ற குறைபாடுகள் இல்லை.

எனவே மாசுபட்ட காற்றை சுவாசித்தால் உடல் எடை அதிகரிக்கும் என விஞ்ஞானிகளால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


  Related Articles
 Comments
Name *
Email *
Comments