head


காளானை யாரெல்லாம் சாப்பிடலாம்?

|Tuesday 29th August 2017|Security| Page Views : 42

காளானில் இரும்புச்சத்து, ஜிங்க், காப்பர், விட்டமின் K, C, D, B, மினரல் சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடென்டுகள், பொட்டாசியம், சோடியம் போன்ற எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

காளான் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்?

காளான் ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் உள்ள கொழுப்பை கட்டுப்படுத்தி, இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

காளானில் லென்டிசைன் மற்றும் எரிடாடின் எனும் வேதிப்பொருட்கள் நம் உடம்பில் ஓடும் ரத்தத்தை சுத்தமாக்க உதவுகிறது.

காளானில் உள்ள புரதச்சத்து மற்றும் அமினோ அமிலங்கள் குழந்தைகளின் உடல் வளர்ச்சியை மேம்படுத்த உதவுகிறது.

காளான் சூப் எளிதில் சீரணமாகும் தன்மை கொண்டது. எனவே இந்த சூப்பை கடும் காய்ச்சல், உடல் இளைத்தவர்கள் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

காளானில் உள்ள ப்ரோட்டீன், ஃபைபர் மற்றும் சில என்சைம்கள் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதுடன் கரைக்கவும் உதவுகிறது.

இரும்புச்சத்து அதிகம் உள்ள காளானை, இரும்புச்சத்து குறைபாடு, சோர்வு, தலைவலி, ஜீரணக் கோளாறுகள் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் அதிகம் சாப்பிடலாம்.

காளான், நிறைய தண்ணீர், ஃபைபர் மற்றும் இன்சுலின் ஆகியவற்றை கொண்டுள்ளது. அதனால் இது சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.