head


பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக அமைச்சர் டெல்லிக்கு ரகசிய பயணம்!

|Wed,13th September 2017|Security| Page Views : 14

சென்னை(12 செப் 2017): பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக பொதுத்துறை அமைச்சர் தங்கமணி இன்று இரவு டெல்லிக்கு ரகசிய பயணம் மேற்கொண்டுள்ளார்.

எடப்பாடி, ஓபிஎஸ் அணிகள் இணைந்ததை அடுத்து அதிமுகவின் பொதுக்குழு இன்று கூடியது. அதில் அதிமுகவின் பொதுச்செயலாளரான சசிகலாவை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கிடையே திமுக தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அதில் ’’எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆட்சியில் நம்பிக்கை இல்லை.

அவர் நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வரவேண்டும் ’’என தமிழக ஆளுநர் வித்தியாசாகரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

அதன்பேரில் எந்தநடவடிக்கையும் எடுக்காத சூழலில் திமுக செயல்தலைவர் இன்று உயர்நீதிமன்றத்தில் தமிழகத்தில் ஆளும் அரசான எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களிடம் போதிய பலம் இல்லை என்றும் சட்டவிதிகளை கூறி, ஏற்கனவே நாங்கள் தமிழக ஆளுநரிடம் பெரும்பான்மையை நிரூபிக்க கோரி மனு கொடுத்துள்ளோம்.

ஆனால் இன்றுவரை தமிழக ஆளுநர் அதன் பேரில் நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆகவே, தமிழக சட்டமன்றத்தை கூட்டி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்திற்கு உத்தரவிட வேண்டும்." என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் எடப்பாடி அரசுக்கு சட்டசிக்கல் உள்ளதால் இதனை சரிசெய்யும் வகையில் பாஜக தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்த பொதுத்துறை அமைச்சர் தங்கமணி இன்று இரவு ரகசியமாக டெல்லி சென்றுள்ளார். என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.