head


மின்சாரசபை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தயார்

|Wednesday 13th September 2017|Security| Page Views : 14

மின்சாரசபை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இவ்வாறு வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக இலங்கை மின்சார பொதுச் சேவை சங்கத்தின் தலைவர் மாலக விக்ரமசிங்க கூறினார்.

இந்நிலையில் மின்சார சபை ஊழியர்களின் பிரச்சினைகள் குறித்து உரிய பிரிவுகள் அவதானம் செலுத்தி இருப்பதாக மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு கூறியுள்ளது.

சம்பளமுரண்பாடுகளை சரி செய்வதற்காக மின்சார சபையின் உள்ளக கணக்காய்வு பிரிவு தற்போது உரிய நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக அந்த அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஏனைய கோரிக்கைகள் சம்பந்தமாக குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் தொழிலாளர் திணைக்களம் ஆகியன தேவையான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.