head


முடியுமானால் அவரவர் சின்னத்தில் போட்டியிடுங்கள்

|Wednesday 13th September 2017|Security| Page Views : 36

எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் மலையக கட்சிகள் அவரவர் சின்னத்தில் போட்டியிட்டால் மலையகத்து மக்களின் ஆதரவு யார் பக்கம் என்பது தெரியவரும். அப்போது சில நபர்கள் சொல்லும் மலையகம் எங்கள் பக்கம் என்பதின் முகத்திரை கிழிக்கப்படும்

அவரவர் தனது கட்சியில் போட்டியிடுவார்களேயனால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சேவல் சின்னத்தில் போட்டியிடும். தைரியம் இருந்தால் சவாலானவர்கள் அவரவர் கட்சி சின்னத்தில் போட்டியிட்டு பார்க்கவும். இந்த சவாலுக்கு நான் தயார்.

எதிர்வரும் தேர்தலில் தனித்து நின்று போட்டியிடும் சவாலை கட்சிகளுக்கு விடுக்கின்றேன். நானும் இந்த சவாலை ஏற்றுக் கொண்டு போட்டியிட தயாராகவுள்ளேன்

என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.