Deprecated: Function mysql_numrows() is deprecated in /home2/elukathi/public_html/NewsMain.php on line 8
Welcome elukathir.lk
mainelu


குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் போராளியால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளனர்!

|Wed 13th September 2017|Security| Page Views : 38

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவரால், நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட கட்டளையை சவாலுக்கு உட்படுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது

விடுதலைப்புலி உறுப்பினர், பயங்கரவாத விசாரணைப் பிரிவில் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலம் சட்டரீதியானதென, அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்ற நீதிபதி மகேஷ் வீரமன் வழங்கிய கட்டளையை சவாலுக்கு உட்படுத்தியே, இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு மனு, புலிகள் அமைப்பின் எறிகணைப் படையணியின் புவலன் என்றழைக்கப்படும் இராசதுரை ஜெகன் சார்பிலேயே தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2000ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதி, பலாலியிலிருந்து இரத்மலானைக்குப் பறந்துகொண்டிருந்த அன்டனோவ்-32, வில்பத்துவ சரணாலயத்தில் வைத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் எறிகணை தாக்குதலில் தலாவ வீரவெவ பிரதேத்தில் சுட்டுவீழ்த்தப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில், அதிகுற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, விடுதலைப்புலிகள் அமைப்பின் எறிகளைப் படையணியின்இருவரும், இம்மாதம் 25ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.