head


கடவுள் அருளால் குழந்தை ஏமாற்றமடைந்தை பெண் !

|Fri 10th November 2017|Security| Page Views : 57

மாத்தறை பிரதேசத்தில் குழந்தை இல்லாத பெண்களுக்கு கடவுளின் அருளால் குழந்தை பெற்று தருவதாக கூறி பல பெண்களை ஏமாற்றிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண், தன்னிடம் இருக்கும் கடவுளின் ஆசிர்வாதத்தால் குழந்தை பாக்கியத்தை பெற்று தர முடியும் என, பெண்கள் பலரை வரவழைத்து சிகிச்சையளித்து வந்துள்ளார்.

சிகிச்சைகளுக்காக வரும் பெண்களுக்கு, பலவகையான மருந்துகளையும் அப்பெண் வழங்கியுள்ளார்.

இந்த மருந்துகளால் பெண்களின் வயிறு பெரியதாகி கர்ப்பமாக இருப்பது போல தோற்றமளித்துள்ளது. 'கடவுளால் கிடைத்த குழந்தை என்பதால் ஸ்கேன் செய்வதை எல்லாம் தவிர்க்க வேண்டும்' என கூறியதால் பெண்கள் ஸ்கேன் செய்து பார்ப்பதையும் மறுத்துள்ளனர்.

ஆனால் சிகிச்சை பெற்ற பெண்ணொருவர் சந்தேகத்தினால், வைத்திய பரிசோதனை செய்த போது அவர் கர்ப்பமடையவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இவ்வாறு பல பெண்கள் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து, குறித்த பெண்ணை, பொலிஸார் கைது செய்துள்ளனர்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.