head


அரசியற் கைதிகள் விவகாரம்! யாழ் பல்கலை மாணவர்களின் நிலைப்பாடு

|Sat,11th November 2017|Security| Page Views : 40

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ச்சியாக போராடுவார்கள் என்றும் அதே போல் தமிழ் அரசியல் கட்சிகளும், தமிழ் மக்களும் தங்களுடைய பொறுப்பை அறிந்து சகல அரசியல் கைதிகளினதும் விடுதலைக்காக உழைக்கவேண்டும் என்றும் யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் கே.கிருஷ்ணமேனன் கூறியுள்ளார். பல்கலைகழகத்தின் சமகால செயற்பாடுகள் தொடர்பாக இன்று ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே மாணவர் ஒன்றியத் தலைவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், ?தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தியிருந்த கதவடைப்புப் போராட்டத்துடன் பீடங்களின் வகுப்புப் புறக்கணிப்பு அறிவிக்கப்பட்டது. தற்போது அரசியல் கைதிகளுக்கு ஆதரவான குறித்த போராட்டத்தை மாணவர்கள் நிறுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து 13ம் திகதி வகுப்புக்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. 13ம் திகதி வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் பல்கலைகழகத்திற்குள் அமைதியான முறையில் அரசியல் கைதிகளுக்காக போராட்டம் நடத்துவோம். அதேபோல் அரசியல் கைதிகளுடைய விடுதலையின் தேவையை உணர்ந்து அரசியல்வாதிகள் மற்றும் தமிழ் மக்கள் இணைந்து போராட முன்வரவேண்டும்? எனக் குறிப்பிட்டார். இதேவேளை தமிழ் அரசியற் கைதிகளுக்கு ஆதரவாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் பல்வேறு வடிவிலான போராட்டங்களினை முன்னெடுத்திருந்தமை இங்கே குறிபிடத்தக்கதாகும்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.