head


டெல்லியில் தொடர்ந்து அதிகரிக்கும் காற்று மாசு: கெஜ்ரிவால் அரசே காரணம் என்று பாஜக புகார்

|Sat,11th November 2017|Security| Page Views : 39

ஹரியானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் பயிர்க்கழிவுகள் எரிக்கப்பட்டு வருவதால் இந்த காற்று மாசு ஏற்படுவதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் புகார் தெரிவித்திருந்தார். ஆனால் கெஜ்ரிவால் அரசின் மெத்தனப்போக்கே காற்று மாசு ஏற்பட காரணம் என்று ஹரியானா அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார். மேலும், இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படும்போது ஹரியானா மாநிலத்தை குற்றம்சாட்டுவதை கெஜ்ரிவால் வாடிக்கையாக கொண்டுள்ளார் டெல்லி மாசு இல்லாத நகரமாக மாறவும், இதற்கு நிரந்தர தீர்வு காணவும் எங்கள் சுமையை டெல்லி அரசு பகிர்ந்து கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார். காற்று மாசு காரணமாக டெல்லியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. டெல்லியை தொடர்ந்து தற்போது உத்தரப்பிரதேசத்திலும் காற்று மாசு பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.