head


"புலிகளைத் தோற்கடித்த படையினரின் கௌரவம் பாதுகாக்கப்படும்? - மைத்திரி!

|Sat,11th November 2017|Security| Page Views : 45

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது இராணுவ மற்றும் நாட்டின் பொதுச் சட்டங்களை மீறி சில அரசியல் வாதிகளின் தேவைகளுக்காக குற்றங்களை இழைத்திருந்தால் அவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்திருக்கின்றார்.

இறுதிக்கட்ட போரின் போது இடம்பெற்ற யுத்தக் குற்றங்களுக்கான குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா உட்பட ஸ்ரீலங்கா இராணுவத்தின் 300 க்கும் மேற்பட்ட உயர்நிலை அதிகாரிகள் மத்தியில் உரையாற்றும் போதே ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கூறியிருக்கின்றார்.

மேலும் வெளிநாடுகளில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் வலையமைப்புக்கள் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு எதிராக வெற்றியளிக்காத முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் மைத்ரிபால சிறிசேன தெரிவித்திருக்கின்றார்.

அதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவருக்கு சார்பாக குரல்கொடுத்துவரும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளையும் ஸ்ரீலங்கா அரச தலைவர் கடுமையாக விமர்சித்திருக்கின்றார்.

ஸ்ரீலங்கா தலைநகர் கொழும்பிலுள்ள இராணுவ வைத்தியசாலைக்கு விஜயம் செய்த முப்படைகளின் தளபதியான ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன, இராணுவத்தின் படையணிகளின் கட்டளைத் தளபதிகள் உட்பட அனைத்து கட்டளைத் தளபதிகளும் ஒரே இடத்தில் கூடியிருந்த கூட்டத்தில் கலந்துகொண்டார்.

இராணுவ வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 350 க்கும் மேற்பட்ட கட்டளைத் தளபதிகள் உட்பட இராணுவ உயர் நிலை அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர். அவர்கள் மத்தியில் உரையாற்றிய போது, தனது அரசாங்கம் இராணுவம் உட்பட அரச படையினரைக் காட்டிக்கொடுப்பதாகத் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தார்.

? எனது அரசாங்கம் இராணுவம் உட்பட முப்படையினரை அவமதித்து வருவதாக சிலர் குற்றம்சாட்டிவருகின்றனர்.

இராணுவத்தினருக்கான வளங்களை மட்டுப்படுத்தியுள்ளதாக சிலர் சாடுகின்றனர். போரை முடிவுக்கு கொண்டுவந்த படையினரை பழிவாங்கும் சதியில் தற்போதைய அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக அரசியல் மேடைகளிலும் ஊடகங்களிலும் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அதேபோல் போரின் போது இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் மற்றும் யோசனைகளை அடிப்படையாக வைத்து எனது அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இராணுவம் உட்பட முப்படையினரைக் காட்டிக்கொடுத்துவிட்டதாகவும் சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்கள் மத்தியில் அரசியல் வாதிகள் இருக்கின்றனர்; ஊடகவியலாளர்கள் இருக்கின்றனர்; அறியாமை காரணமாக கதைக்கும் மக்களில் சிலரும் இவர்களில் அடங்குகின்றனர். அத்துடன் இவர்களில் இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற இராணுவ உயர் அதிகாரிகள் சிலரும் அங்கம் வகிக்கின்றனர்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.