head


இந்திய பொருளாதார வளர்ச்சி பிரமிக்கத்தக்கதாக உள்ளது - பாராட்டும் டிரம்ப்.!

|Sat,11th November 2017|Security| Page Views : 43

வியட்நாமில் நடந்துவரும் ஆசிய - பசிபிக் பொருளாதார ஒத்துழைப்புக்கான மாநாட்டில் பேசிய டிரம்ப், தெரிவித்ததாவது "நாட்டின் 70 வது சுதந்திர தினத்தினை கொண்டாடும் வேளையில், உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுத்துள்ளது.

இந்திய பொருளாதாரம் திறந்துவிடப்பட்ட பின் பிரமிக்கத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது. நடுத்தர வர்க்கத்தினருக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கி தந்துள்ளதாகவும்" இந்தியா பொருளாதாரம் குறித்து பேசினார்.

முன்னதாக,பாஜகவின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு இந்தியா பொருளாத வளர்ச்சி (ஜிடிபி) சரிந்துவிட்டதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துவருவது குறிப்பிடத்தக்கது.

கருப்பு பண ஒழிப்பிற்காக மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை முற்றிலுமாக தோல்வியடைந்து விட்டதாக முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன், ப.சிதம்பரம், முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளதுடன், அந்நடவடிக்கையின் காரணமாக இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் கருத்து தெரிவித்துவருவது குறிப்பிடத்தக்கது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.