head


பாஜகவினர் என்ன காந்தியின் வாரிசுகளா.. விளாசும் டிடிவி தினகரன்.!

|Sat,11th November 2017|Security| Page Views : 37

சசிகலா மற்றும் தினகரன் குடும்பத்தினர் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் வீடுகள், அலுவலகங்கள் என வருமான வரித்துறையினர் நாடு முழுவதும் சுமார் 190 க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்றைக்கு முன் தினம் சோதனை நடத்தினர்.

அதன் தொடர்ச்சியாக, 3 வது நாளாக சசி குடும்ப உறவுகளின் இல்லங்களில் சோதனை நடைபெற்றுவரக்கூடிய சூழலில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் .

பாஜகவினர் என்ன காந்தியின் வாரிசுகளா.. விளாசும் டிடிவி தினகரன்.! அப்போது, "அரசியல் காழ்ப்புணர்வின் காரணமாகவே எங்கள் குடும்பத்தினரின் மீது வருமான வரி சோதனை நடத்தப்பட்டுவருகிறது.

அதனை எதிர்கொள்ள நாங்கள் தயாராகவே உள்ளோம்.

இந்த வருமான வரி சோதனையானது, அரசியல் நோக்கம் கொண்டதுவென கருத்து தெரிவித்த தொல்.திருமாவளவன், வைகோ, முத்தரசன், வேல்முருகன் உள்ளிட்ட தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என தெரிவித்தார்.

மேலும், "எங்களை குறை கூறி சோதனை நடத்தும் பாஜகவினர் என்ன காந்தியின் வாரிசுகளா" எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.