head


மக்கள் பணத்தை கொள்ளையடித்துள்ளனர் சசி உறவுகள் - தமிழிசை பகீர் கருத்து.!

|Tue,14th November 2017 |Security| Page Views : 21

வருமான வரி சோதனை: சசிகலா மற்றும் தினகரன் குடும்பத்தினர் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் வீடுகள், அலுவலகங்கள் என வருமான வரித்துறையினர் நாடு முழுவதும் சுமார் 190 க்கும் மேற்பட்ட இடங்களில் 9 ஆம் தேதி முதல் நேற்று வரை வருமான வரித்துறை ரெய்டு நடைபெற்றது. ஜாஸ் சினிமாஸ், ஜெயா டிவி உள்ளிட்ட நிறுவனங்களிலும் வருமான வரி சோதனையானது அதிரடியாக நடைபெற்றது.

மேற்கண்ட வருமான வரி துறையினரின் சோதனையில், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் குறித்தோ, ஆவணங்கள் குறித்தோ இதுவரையில் எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை.

மக்கள் பணத்தை கொள்ளையடித்துள்ளனர் சசி உறவுகள் - தமிழிசை பகீர் கருத்து.! மக்களிடம் கொள்ளையடித்த பணம்: இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை "மக்களிடமிருந்து கொள்ளையடித்த சசிகலா குடும்ப உறவுகள் இத்தனை கோடி அளவுக்கு சொத்துக்களை சேர்த்துள்ளனர். அதன் காரணத்தினாலேயே அவர்களின் இல்லங்கள் மற்றும் அலுவலங்கள் ஆகியவற்றில் வருமான வரித்துறையினரின் சோதனையானது நடைபெறுகிறது." என தெரிவித்தார்.

மக்கள் பணத்தை கொள்ளையடித்துள்ளனர் சசி உறவுகள் - தமிழிசை பகீர் கருத்து.! அரசியல் உள்நோக்கம்: சசிகலா குடும்ப உறவுகள் இல்லங்கள் மற்றும் அலுவலகங்களில் நடைபெறும் ஐடி ரெய்டானது அரசியல் உள்நோக்கம் கொண்டது தொல்.திருமாவளவன் உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள் மத்திய அரசினை விமர்சிப்பது குறிப்பிடத்தக்கது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.