head


விஜயகலா மகேஸ்வரன்வின் கோரிக்கை!

|Tuesday 14th November 2017|Security| Page Views : 73

வடகிழக்கில் தமிழீழம் கோரி,எமது இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தினை முன்னெடுத்து,அந்த போராட்டம் நிராகரிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் எமது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருக்கின்றாரா இல்லையா என்ற நிலை உருவாகியுள்ளது.

கடந்த கால அரசாங்கம் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றாரா என்பதனை உறுதிப்படுத்த வேண்டும்.

அவர் இறந்துவிட்டார் என்பதற்குரிய மரணச் சான்றிதழை வழங்கும் பட்சத்தில் பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதனை நாமும் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனே,இன்று எமது தலைவராக எமது நாட்டிலும், புலம்பெயர் நாட்டிலும் உள்ள மக்களுக்காக உருவாகியுள்ளார்.தமிழ் மக்களின் தனித் தீர்விற்காக அரசாங்கத்துடன் விட்டுக்கொடுத்து வருகின்றார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்நாட்டிலும்,சர்வதேசத்திலும் மதிக்கத்தக்கவராக இருக்கின்றார்.ஆகையினால், சம்பந்தனின் ஊடாகவே எமது மக்களின் தீர்வுத் திட்டத்தினைக் கொண்டு வர முடியும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் 2020 ற்குள் ஒரு தீர்வினைக் கொண்டு வருவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.