head


கடற்கரையில் மாணவனின் சடலம் மீட்பு

|Tuesday 14th November 2017|Security| Page Views : 54

இன்று செவ்வாய்கிழமை(14-11-2017) காலை திருக்கோவில் கடற்கரையில் சாய்ந்தமருது பிரதான வீதி 17ஆம் பிரிவைச் சேர்ந்த சஹாப்தீன் அப்ரீன் என்ற 17 வயதுடைய மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு சாய்ந்தமருது கடலில் நண்பர்களுடன் நீராடச் சென்று கடல் அலையில் சிக்குண்டு காணாமல் போன இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.