head


ஸ்ரீலங்கா, பயங்கரவாதம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை

|Thu 05th December 2017|Security| Page Views : 83

பாதுகாப்பு சபை வலியுறுத்தியிருப்பது, ?பயங்கரவாதம் தொடர்பான எந்த செயற்பாடுகளும் அவைகளின் நோக்கம் எதுவாக இருப்பினும், எங்கு, எப்போது மற்றும் எவரால் செய்யப்பட்டாலும் குற்றவியல் மற்றும் நியாயப்படுத்த முடியாதவை ஆகும்? எல்லா நாடுகளும்; பயங்கரவாதிகளின் செயற்பாடுகளினால் சர்வதேச சமாதானம் மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது எல்லா வழிகளிலும் அதை எதிர்த்து போராட வேண்டியது அவசியம் என்பதை மீளவும் உறுதிப் படுத்துகிறோம்?.

- (நான்கு அமைதிப்படையினர் மாலியில் ஐநா பணியில் ஈடுபட்டிருந்தபோது இரண்டு கொடூரமான தாக்குதல்களில் கொல்லப்பட்டார்கள், ஐநா செய்தி மையம் - 24.11.2017)

கடந்த செப்ரெம்பர் 2017ல் ஸ்ரீலங்காவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பபலோ டீ கிரீப் ஒக்ரோபர் 2017ல் நியுயோர்க்கில் நடைபெற்ற ஐநா பொதுச்சபையின் 72ம் அமர்வில் பேசும்போது, ??ஸ்ரீலங்காவில் ஐநா செயற்பாடுகள் மீதான சுயாதீன உள்ளக மறுசீரமைப்பு குழுவின் செயற்பாடுகள் மூலமாக புதிய நிறுவனப் பொறிமுறை மற்றும் தடைகளுக்கான திறன் என்பனவற்றை முன்னேற்றுவதற்கான உத்வேகம் பிறந்துள்ளது? மற்றும் இதன் விளைவாக ஐநா ஒரு புத்தம் புதிய முன்முயற்சியாக ?மனித உரிமைகள் முன்னேற்ற முன்னணி? என்கிற முயற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது? எனக்கூறினார்.

இந்த முன்முயற்சியின் ஒரு பகுதியாக ஒக்ரோபர் 2014ல் ஐநா பொதுச் செயலர், மோதல்களைத் தடுப்பது மற்றும் தீர்ப்பது உட்பட சமாதான செயற்பாடுகளை மீள்பரிசீலனை செய்வதற்காக முன்னாள் திமோர் - லெஸ்ட் இன் அரச தலைவர் தலைமையில் ஒரு உயர்மட்டக் குழுவை அமைத்தார், ராதிகா குமாரசாமி இதில் ஒரு அங்கத்தவர்.

சமாதான செயற்பாடுகளுக்கான குழு மிகத் துல்லியமாக அவதானித்திருப்பது பயங்கரவாதக் குழுக்கள் ?? குறிப்பாக சர்வதேச சமாதானம் மற்றும் பாதுகாப்புக்கு வீரியமுள்ள அச்சுறுத்தலாக விளங்குகின்றன? மற்றும் அவர்களின் அதிகபட்ச இலக்குகள் நேரடியாகவே தேசிய நாடுகளின் இருத்தலுக்கு அச்சுறுத்தலாக உள்ளன?.

சமச்சீரற்ற அச்சுறுத்தல்கள் அமைந்துள்ள விரோதமான சூழ்நிலைகளில் ? பொதுமக்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையை சேர்ந்தவர்கள் ஆகியோரைப் பாதுகாப்பதற்காக படைகளை தந்திரமான முறையில் பயன்படுத்துவதற்கான விருப்பம் இருப்பது அவசியம்? என்று குழுவின் அறிக்கை ஒப்புக்கொள்கிறது.

எனினும் பயங்கரவாதத்தை வரையறுக்கும் ஒரு அற்பமான முயற்சியில் குழுவின் அறிக்கை தெரிவிப்பது? பாதுகாப்புச் சபையின் தீர்மானம் 2178 (2014) குறிப்பிடுவது, வன்முறையான தீவிரவாதம் பயங்கரவாதத்திற்கு உகந்ததாக இருக்கும் மற்றும் அந்த அர்த்தத்தில் அந்தப் பதம் தற்போதைய அறிக்கையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

? இது முற்றிலும் போதாததாகவம் மற்றும் அபாயகரமான முறையில் குறைபாடாகவும் உள்ளது. பொருத்தமான பதில்களை வடிவமைப்பதற்கும் இந்தக் குறிப்பிட்ட அச்சுறுத்தல்களுக்கு தீர்வுகள் வழங்குவதற்கும் மிகவும் ஆழமான நுண்ணறிவு தேவைப்படுகிறது.

பயங்கரவாதத்தைப் பற்றி முறையான மதிப்பீடு செய்வதற்கு மேலதிக முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

பயங்கரவாதமானது உலகின் அனைத்துப் பகுதிகளுக்கும் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கிறது, அதற்கான அடிப்படைக் காரணம் ஒவ்வொரு சமுதாயம், குழு அல்லது தனிப்பட்ட நபருக்கு ஏற்ப மாறுபடுகிறது. ஐநா மனித உரிமைகள் ஆணையம், 2005ல், பயங்கரவாதத்தை எதிர்க்கும் அதேநேரம், மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களை பாதுகாத்தல் மற்றும் முன்னேற்றுதல் என்பதற்காக ஒரு விசேட தூதுவரை நியமித்தது, அது முதல் ஐநா மனித உரிமைகள் ஆணையம் தொடர்ச்சியாக தனது ஆணையை விரிவு படுத்தி வருகிறது.

இதைத் தவிர, இந்த சிக்கலான நிகழ்வை முழமையாகப் புரிந்து கொள்வதில் தோல்வி அடைந்திருப்பது ஐநா பயங்கரவாதத்திற்கான ஒரு வரைவிலக்கணத்தை இன்னும் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதுடன் (மேனன் 2016) மற்றும் அதைத் தடுப்பதில் தோல்வியும் அடைந்துள்ளது என்கிற உண்மை தெளிவாகிறது.

மோதலுக்கான ஐநாவின் பதில், அடிப்படை அச்சுறுத்தல்கள் மற்றும் அவற்றின் பரிமாணங்களைப் பற்றிய அதன் புரிதல் மூலம் நேரடியாக பாதிப்புக்கு உள்ளாகிறது. முக்கியமாக ஸ்ரீலங்காவைப் பொறுத்தவரை ஐநா செயலாளர் நாகத்தின் நிபுணர் குழுவின் (பி.ஓ.ஈ) ஸ்ரீலங்காவைப் பற்றிய அறிக்கை (உள்ளுரில் அது தருஸ்மன் அறிக்கை என அழைக்கப்படுகிறது), பொறுப்பற்றதாகவம், குறைபாடுள்ளதாகவும் உள்ளதுடன் மற்றும் அதன் அறிவார்ந்த கடினத்தன்மையின் குறைபாட்டுக்காக விமர்சிக்கவும் படுகிறது.

மிகவும் ஆபத்தான, எதிர்பாராத அனைத்து நவீன அச்சுறுத்தல்களையும்; மற்றும் அதை வெற்றிகரமாக அழிப்பதற்காக மிகவும் அரிதான ஒன்றாக அரசாங்கம் வழங்கிய பதில்கள் உட்பட அவற்றை விளங்கிக் கொள்வதற்கான ஒரு முறையான ஆய்வை மேற்கொள்வதற்காக ஸ்ரீலங்காவை பயன்படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பாக இது இருந்தது.

மாறாக அந்த அரசாங்கம் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்கிற எச்சரிக்கையை காரணமாக்கி, நிபுணர் குழு , நம்பகமான ஆதாரங்கள் இல்லாமல்.

பொதுமக்கள் இழப்பு பற்றிய எண்ணிக்கை இனப் படுகொலை மட்டத்தை அடையும் அளவுக்கு விரிவுபடுத்தி அரசாங்கத்திற்கு எதிராக ஏமாற்றமான அறிக்கையை சமர்ப்பித்திருந்தது.

நிபுணர் குழவின் அறிக்கையை மீளாய்வு செய்த இராணி வழக்கறிஞர்களான சேர்.ஜியோப்ரி நைஸ் மற்றும் றொட்னி டிக்ஸன் ஆகியோர் சொல்வது:?? சாட்டப்பட்டுள்ள குற்றவியல் வன்முறை தொடர்பாக நிபுணர் குழுவின் கண்டுபிடிப்புகள், வழக்கமாக அத்தகைய கண்டுபிடிப்புகளை மேற்கொள்வதற்கு நடத்தப்படும் சான்றுகளுக்கான கடுமையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையுடன் தொடர்புடைய சட்டத் தரங்கள் குறைவாகவே காணப்படுகின்றன?.

(பக்கம் 4) ?சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் வழக்கமான சர்வதேச சட்டங்களின் கீழ் நடத்தப்படும் ஒரு சட்டவிரோத தாக்குதலுக்கான சிக்கலான மற்றும் சட்டபூர்வ தேவைகளைப் பற்றிய ஆய்வுகளில் ஒவ்வொரு குறிப்பிட்ட வழக்கிலும் உண்மைகள் அறிக்கையில் மிகவும் குறைவாகவே குறிப்பிடப்பட்டுள்ளன?. (பக்கம் 5) ( ஸ்ரீலங்காவின் பொறுப்புக்கூறும் விடயம் பற்றிய செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பான மீளாய்வு)

விசேடமாக பிரித்தானிய வெளியுறவுத்துறை மற்றும் பொதுநலவாய அலுவலகம் வெளியிட்ட இரகசிய ஆவணங்களின் மூலமாக பொதுமக்களிடம் சென்றுள்ள தகவல்களின்படி, குழவின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள பாரியளவு பொதுமக்களின் மரணம் பற்றிய எண்ணிக்கையை சவாலுக்கு உட்படுத்துகிறது,

நிபணர் குழுவின் அணுகுமுறை பொறுப்புக்கூறல் பற்றிய கவனத்தில் மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்தது என்பது இதிலிருந்து தெளிவாகிறது. இந்த இரண்டு மீளாய்வாளர்களும் தெரிவிப்பது:

அவசியமான சிக்கல் நிறைந்த கேள்விகளுக்கு குழு அதனது அறிக்கையில் பதிலளிக்கவில்லை. மாறாக குழு ?விபரங்கள் குறைவான அளவுக்கு மீறிய சுருக்கமான அணுகுமுறையை? மேற்கொண்டுள்ளது

மற்றும் பொருத்தமான பொறுப்புணர்வு பொறிமுறையைக் கருத்தில் கொண்டு அதன் முதன்மையான பணியைப் பெறுவதற்காக இரு தரப்பினரிடமும் ஒரு பொதுவான வழியில் பொறுப்பைச் சாட்டியுள்ளது. இருப்பினும் மோதல் மற்றும் நிகழ்த்தப்பட்டதாகச் சொல்லப்படும் மீறல்கள் பற்றிய சரியான கணக்கு இல்லாமல் மேற்கொள்ளப்படும் இந்தப் பொறிமுறைகள் பற்றிய எந்த கலந்துரையாடலும் தொடர்பு அல்லது பயன் அற்றதாகவே இருக்கும்?.

சேர் ஜியோப்ரி நைஸ் மற்றும் சேர்.றொட்னி டிக்ஸன் ஆகியோர் யுகோஸ்லாவியாவில் நடந்த சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ஐசிரிவை) மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றங்களில் (ஐசிசி) பணிபுரிந்த அனுபவம் உடையவர்கள்.

ஐநா செயலாளர் நாயகம் நிபுணர் குழுவிற்கு அவர்களின் அணுகுமுறையானது பொறுப்புக்கூறலுக்கான காரணங்களை நிறுவுவதில் விரைவு காடடுவதற்கு மாறாக ஐநாவிற்கு அதிகம் பயனுள்ளதாக இருக்கவேண்டும் என்று ஆலோசனை வழங்குவதற்கு இந்த வாய்ப்பை பயன்படுத்தவில்லை.

திறமையான இரண்டு சட்டவாளர்களும் சொல்வதின்படி: ?சாட்டப்படும் தாக்குதல்களின் தன்மை பற்றிய அதிகமான எளிய அணுகுமுறையில் பாரிய குறைபாடு உள்ளது, ஏனென்றால் கிடைக்கக்கூடிய எல்லா ஆதாரங்களையும் வைத்து எந்த ஒரு குறிப்பிட்ட தாக்குதலும் இராணுவத்தை நியாயப்படுத்துகிறதா என்பதைக் கண்டறிவதற்கான சிக்கலான மற்றும் சிரமமான வேலையை அறிக்கை வெறுமே அலட்சியம் செய்துள்ளது?

ஸ்ரீலங்கா மீது இப்போது சுமத்தப்பட்டுள்ள பிரேரணை 30ஃ1 இந்த குறைபாடான அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே மேற்கொள்ளப் பட்டுள்ளது. மனித உரிமைகளுக்கான ஐநாவின் உயர் ஆணையர் அவற்றினால் அதிகம் ஈர்க்கப்பட்டுள்ளார்,

சித்திரவதை,கட்டாய காணாமற் போக்கடித்தல், யுத்தக் குற்றங்கள் மற்றும் மானிடத்துக்கு எதிரான போன்ற இத்தகைய மீறல்களுக்கு அனைத்து ஐநா அங்கத்துவ நாடுகளும் நீதி மன்றங்களில் உலகளாவிய சட்ட அதிகாரத்தை பிரயோகிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

நிச்சயமாக ஸ்ரீலங்கா அரசாங்கம் தனக்கே உதவி செய்யவில்லை. எந்த ஒரு அரசாங்கமும் எதையும் ஆராயாமல் சர்வதேச சமூகத்திற்கு அடங்கிப்போகும் நிலையில் இருக்கவில்லை.

நாங்கள் அனைவரும் அதன் அங்கத்தவர்கள். தற்போதைய அரசாங்கம் அந்த பிரேரணைகளுக்கு இணை அனுசரணை வழங்குவதன் மூலம் அறிவற்ற பாதையை தேர்ந்தெடுத்துள்ள அதேவேளை முந்தைய அரசாங்கம் விளக்கமளிப்பதற்கு மறுத்துரைத்து தோல்விகண்டது.

த ருஸ்மன் அறிக்கை வெளியிடப்பட்டபோது அன்று ஆட்சியில் இருந்த அரசாங்கம் அதற்கு சவால்விடுவதற்கு எதையும் செய்யவில்லை.ஸ்ரீலங்காவிடம் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (எல்.எல்.ஆர்.சி) அறிக்கை (முந்தைய அரசாங்க காலத்தில் மற்றும் பரணகம (இரண்டாம் ஆணை) அறிக்கை என இரண்டு அறிக்கைகள் கைவசம் இருந்த போதிலும், பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடுவது பற்றிய சர்வதேச பிரசங்கத்தில் பங்கேற்கும் வாய்ப்பினை நாம் தவறவிட்டோம்.

பரணகம அறிக்கை பூர்த்தியான போதிலும் தீர்மானம் 30ஃ1 ஏற்றுக்கொள்ளும் வரை அந்த அறிக்கையை பாராளுமன்றில் சமர்ப்பிப்பதை இந்த அரசாங்கம் தாமதப்படுத்தியது. அறிக்கையானது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலும் சமர்ப்பிக்கப்படவில்லை.

இந்தப் பிரச்சினையை வித்தியாசமான விதமாக அணுகுவதற்கு ஸ்ரீலங்காவிற்கு மற்றுமொரு வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளது. நெஸ்பே பிரபு அணிசார நாடுகள் அலுவலகத்தில் இருந்து ஆவணங்களைப் பெறுவதற்கு ஒரு நீண்ட கடும் போராட்டத்தை நடத்தியுள்ளார், அது ஸ்ரீலங்காவின் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் பற்றிய ஐநாவின் பார்வைக்கு இணக்கமான முறையில் சவால் விடுக்கிறது. நெஸ்பே பிரபுவுக்கு இறுதியாக கிடைத்த அத்தகைய ஆவணம் 26 ஏப்ரல் 2009 எனத் திகதியிட்ட பிரித்தானிய பாதுகாப்புத்துறை அலுவலரின் ஆவணமாகும், அது ஸ்ரீலங்கா இராணுவத்தின் ஈடுபாட்டு முறையானது நன்கு சிந்தித்து துல்லியமாக மேற்கொள்ளப்பட்டது எனக் குறிப்பிடுகிறது.

தமிழ் சிறுபான்மையினர் மீது கண்மூடித்தனமான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன என்று இப்போது பிரபலமாக இருக்கும் விரோதப் பிரச்சாரத்திற்கு வெகுதூரம் மாறுட்டது. அந்த பாதுகாப்புத்துறை அலுவலர் எழுதுவது:

?கேள்வி என்னவென்றால் ஸ்ரீலங்கா இராணுவம் அடுத்து என்ன செய்யப்போகிறது என்பதுதான். ஒரு முற்றுகை நடவடிக்கையை மேற்கொள்வதற்கு அல்லது தாக்குதலற்ற பிரதேசத்தை திரும்பவும் பிரிப்பதற்கு கடலேரியினால் ஏற்பட்டுள்ள தடை முன்னிலும் கடினமானது.

அந்த தந்திரங்கள் முன்னரைப் போலவே இருக்கும் - பொறுமையான மதிப்பீடு, ஊடுருவல் மற்றும் அடையாளம் காணப்பட்ட ஒரு பலவீனமான இடத்தில் சடுதியான மற்றும் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளுவதற்கு சாத்தியம் உள்ளது?.

பொதுமக்கள் மனிதக் கேடயங்களாக பிடித்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்கிற மதிப்பீட்டினால் ஸ்ரீலங்கா இராணுவத்தின் தெரிவுகள் கட்டுப்படுத்தப் பட்டதைப் பற்றி விளக்குகையில் அவர் சொல்வது: ? இராணுவத்துக்கு, நிலம் மற்றும் நீர் ஆகிய இரண்டிலும் தாக்குதல் நடத்துவது அல்லது எல்.ரீ.ரீ.ஈ யினை அழிப்பதற்காக தாக்குதலற்ற பிரதேசத்தின் இதயப்பகுதியில் ஒரு ஆச்சரியமான திடீர் நடவடிக்கையாக ஒரு வான் தாக்குதல் நடத்துவது என்பனவற்றை கருத்தில் கொள்ளும் சாத்தியம் இருந்தது, ஆனால் இது அதிகம் ஆபத்தானது எல்.ரீ.ரீ.ஈ மீதமாக உள்ள பொதுமக்களை ஒரு திரளான வெகுஜன தற்கொலையின் பகுதியாக அழிப்பதற்கு திட்டமிட்டிருக்கிறது என்பதை உறதிப்படுத்தும் ஆதாராம் இருந்தால், இதை முன்கூட்டியே கையாள்வதற்கான நிகழ்தகவு இருந்தது. இங்கு ஒரு நாடு மற்றும் அதன் இராணுவம் இந்த அதிர்ச்சிகரமான விளைவை எதிர்கொள்கிறது. ஆதாரமாக அனுப்பப்பட்ட ஆவணம் ஒன்றில் குறிப்பிட்டிருப்பது,பெப்ரவரி 10ம் திகதியிட்ட ஐநா அறிக்கையில் கூறப்பட்டிருப்பது ?அரசாங்கப் பகுதிக்கு தப்பிச் செல்ல முயன்ற பொதுமக்களில் எல்.ரீ.ரீ.ஈயினால் 19 பேர் கொல்லப்பட்டு 75 பேர் காயம் அடைந்ததார்கள் என்று?. சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் மருத்துவ உதவிகளை நாடும் பொதுமக்களில் பெருவாரியானவர்களின் கால்களுக்கு கீழ் துப்பாக்கிச் சூட்டுக் காயம் உள்ளது - இது அவர்கள் தப்பிச் செல்வதை தடுப்பதற்காகச் சுடப்பட்டது என்று ஐநா அறிவித்துள்ளது.

ஒரு அரசாங்கம்; ஆபத்தான சமயங்களிலும் பதட்டமடையாமல் இருப்பதும் மற்றும் ஒரு இராணுவம் வழமைக்கு மாறான நிலமைகளிலும் குடிமக்களைப் பாதகாப்பதற்காக சரியான முடிவை எடுப்பதும் மிகவம் முக்கியமான இலக்குகளாகும். ஐக்கிய இராச்சியத்தின் பாதுகாப்பு அலுவலர் எப்படி பெரும் எண்ணிக்கையிலான உள்ளக இடம்பெயர்ந்தோர் பாதுகாக்கப்பட்டு அவர்கள் ஸ்ரீலங்கா இராணுவத்தினாரால் பரிசோதிக்கப்பட்டார்கள் என்பதை விளக்குகிறார்.

இந்த நடவடிக்கை திறமையானதும் பயனுள்ளதும் ஆகும், ஆனால் மிகவும் முக்கியமாக அவர்கள்மீது கருணை, மரியாதை மற்றும் அக்கறை செலுத்தப்பட்டது.இது முற்றிலும் உண்மையானது என்று நான் உறுதியாக நம்புகிறேன். அந்த நேரத்தில் அங்கு நான் சமூகமளித்தது திட்டமிட்ட ஒன்றல்ல அது ஒரு திடீர் வாய்ப்பை அடிப்படையாகக் கொண்டது.

300 மீற்றர் நீளமான கடற்கரைப் பகுதியில் சுதந்திரமாக செல்வதற்கு 4 மணித்தியாலங்களுக்கு மேலாக எனக்கு வாய்ப்புக் கிட்டியது மற்றும் 200க்கும் மேற்பட்ட ஸ்ரீலங்கா கடற்படை ஆட்கள் கடினமான நிலமைகளிலும் மிகவும் கடுமையாக உழைப்பதை என்னால் காண முடிந்தது. அவர்களின் உயர்வான மன உறுதி குறிப்பிடத்தக்கதாக இருந்தது.

அவர்கள் தங்கள் வேலையை அனுபவித்து ரசிப்பதுடன் அது திருப்தியளிப்பதை தெளிவாகக் காண்கிறார்கள். சிந்தனையுடன் கூடிய உதவியைப் பற்றிக் குறிப்பிடுவதற்கு எண்ணற்ற உதாரணங்கள் உள்ளன - தாய்மார் குழந்தைகளை தேடியலையும் வேளைகளில் அந்தக் குழந்தைகளை கவனிப்பது, வயதான பெண்கள் மற்றும்; குழந்தைகளைச் சுமந்தவாறு பைகளுடன் வரும் தாய்மாருக்கு உதவுதல், உணவு வழங்கி உற்சாகமூட்டுவது போன்றவை?.

இந்த குறிப்பின் அடியில் ஒரு கருத்தைச் சேர்த்திருப்பதன் மூலம் மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் இராணுவத்தினரின் நடத்தை எங்கள் இதயத்தை தொடும்படி செய்திருக்கிறார். ?அங்கு ஒரு உண்மையான ஆபத்து உள்ளது, ஒரு தற்கொலைக் குண்டுதாரி அந்த கடற்கரை சுற்றாடலில் ஒரு திரளான மரணங்களை ஏற்படுத்த முடியும்.

வுவனியா பரிசோதனை மையத்தில் நடந்த தற்கொலை குண்டுத் தாக்குதலின் பின்னர் அங்கு நிலவிய அமைதியான சூழ்நிலையையும் மற்றும் அங்கு எத்தனை இரக்கம் காட்டப்பட்டது என்பதையும் கண்டு உண்மையாகவே நான் ஆச்சரியப்பட்டேன்?. நலன்புரி சேவைகள் சில பாதுகாப்புச் செயற்பாடுகளையும் மீறுவதாகத் தோன்றுகிறது.

26 ஏப்ரல் 2009,வரை அவர் அனுப்பிய செய்திகளை கவனமாக வாசித்த பின்னர் அவரது கண்டுபிடிப்புகளை சுருக்கி நெஸ்பே பிரபு பின்வருமாறு குறிப்பிடுகிறார். -எல்.ரீ.ரீ.ஈ யின் பிடியில் இருந்து தப்பிய பெரும் எண்ணிக்கையிலான உள்ளக இடம் பெயர்ந்தோர் தன்னிச்சையாகவே ஸ்ரீலங்கா இராணுவத்தினரிடம் ஓடிவந்தார்கள், இறுதிக் கட்டத்தின் முன்பு இராணுவத்தினரால் கவனிக்கப்பட்டு வந்தவர்களின் எண்ணிக்கை 165,000. ஸ்ரீலங்கா இராணுவத்தினர் தமிழ் மக்களை கொல்வதை ஒரு கொள்கையாக கொண்டிருந்தார்கள் என்பதை இது முற்றாக நிராகரிக்கிறது.

-உள்ளக இடம் பெயர்ந்தோர் இரக்கம், அக்கறை மற்றும் திறனுடன் கவனிக்கப் பட்டார்கள் என்பதற்குத் தெளிவான ஆதாரங்கள் உள்ளன.

-பொது மருத்துவ மனைகளின் உள்ளேயும் மற்றும் வெளியேயும் இருந்து துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்ட போதிலும் ஸ்ரீலங்கா இராணுவத்தினர் தடையைக் காட்டினர் என்று ஜனவரி 28ல் அனுப்பபட்ட குறிப்பின் 4ம் பக்கத்தில் தெளிவு படுத்தப்பட்டுள்ளது.

-உள்ளக இடம் பெயர்ந்த தங்களது சொந்தத் தமிழர்கள் தொடர்பாக எல்.ரீ.ரீ.ஈ யின் நடத்தை பற்றி அதிகாரி அனுப்பிய குறிப்புகளில் தெளிவாக அறிவிக்கப் பட்டுள்ளது.

1) எல்.ரீ.ரீ.ஈ யின் கட்டாய ஆட்சேர்ப்பு குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுவர்களை ஆட்சேர்ப்பது அதிகரித்தது - எல்.ரீ.ரீ.ஈ எதிர்த் தாக்குதல்களில் பலர் உயிரிழந்துள்ளார்கள்(மார்ச்12)

(2 )பெப்ரவரி 2009 வரை கடந்து வந்த 37197உள்ளக இடம் பெயர்ந்தோர்களில், 200க்கு மேற்பட்ட எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் உள்ளக இடம் பெயர்ந்தோர் என்கிற போர்வையில் ஊடுருவ முயற்சித்தது அடையாளம் காணப்பட்டது (மார்ச்12)

(3) பொதுமக்களுக்காக அனுமதிக்கப்பட்ட எந்த ஒரு நிவாரணத்திலும் அவர்களுக்கு கிடைப்பதற்கு முன்பு தனது சொந்த தேவை பூர்த்தியாவதை எல்.ரீ.ரீ.ஈ உறுதி செய்தது (மார்ச்12)

(4) சிறிதளவு எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களே சீருடையில் இப்போது இருப்பதால் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களை பொதுமக்களில் இருந்து வேறுபடுத்துவது சாத்தியமற்றதாக உள்ளது (28ஜனவரி)

(5) பெப்ரவரி 1 முதல் ஏப்ரல் 26 வரையான காலப்பகுதியில் 6432 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது

-இவைகள் தெளிவாக அடையாளப்படுத்துவது குறிப்பாக ஸ்ரீலங்கா அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்கள் மீது, துடைத்தழிக்கும் யுத்தக் குற்றம் தொடர்பான யுத்தக் குற்றச்சாட்டுக்கான வழக்குகள் எதுவுமில்லை என்பதை ? ஐநா வின் மதிப்பீடான 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அவர்கள் ஏற்றுக் கொண்டிருப்பது முற்றிலும் தவறானது என்பதை சொல்வதற்கான நேரம் இது. அனைத்து ஆதாரங்களும் இப்போது சுட்டிக்காட்டும் எண்ணிக்கை 7000 - 8000 என்பதேயாகும்.

அரசாங்கம் மற்றும் ஐநா ஆகியவை இந்த வெளிப்படுத்தல்களை அவசரமாக மறுசீரமைக்க வேண்டும். பயங்கரவாதத்தை அழிப்பதில் ஸ்ரீலங்கா பெற்றுக்கொண்ட அனுபவம் மிகச் சரியாக விளங்கிக் கொள்ளப்பட வேண்டியது அவசியம்.

மோதல்களைத் தடுப்பது, மோதல்களுக்கான அடிப்படைக் காரணங்கள் என்பன பற்றி நெருக்கமாக ஆராய வேண்டும். ஆனால் தீங்கிழைக்கப் பட்டவர்கள் பேச்சு வார்த்தை வழியல்லாது பயங்கரவாதத்தை (வெறும் வன்முறை அல்ல) தேர்வு செய்தால் குறிப்பாக தேசிய அரசுகளின் இருப்பின்மீது நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்தினால், பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக அரசுகளின்மீது ஒரு தலையாய மதிப்பை அது திணிக்கிறது, இதை ஐநாவும் ஒப்புக்கொண்டுள்ளது.

இந்த யதார்த்தம் முக்கிய காரணியாக இருத்தல் வேண்டும். அப்போதுதான்; ஐநா பெருமளவில் ஏற்றெடுத்துள்ள ?முன்கூட்டிய மோதல் தடுப்பினை? கொண்டு வரும் திட்டத்தில் ஸ்ரீலங்காவின் உண்மையான பாடங்களை சர்வதேச சமூகம் பயன்படுத்த முடியும்.

கட்டுரை ஆசிரியர் அவர்களுக்கு நன்றி - தேனீ
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.