head


இஸ்ரேலுடனான துருக்கியின் உறவு துண்டிக்கப்படலாம் - துருக்கி அதிபர்

|Wed,06th December 2017|Security| Page Views : 33

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அமெரிக்கா அங்கீகரிக்குமானால், இஸ்ரேலுடனான துருக்கியின் உறவு துண்டிக்கப்படலாம் என்று துருக்கி அதிபர் எச்சரித்துள்ளார்.

இத்தகைய நடவடிக்கை முஸ்லீம்களுக்கான சிவப்புக் கோட்டை தாண்டுவதாக அமையும் என்று துருக்கி அதிபர் ரிசெஃப் தாயிப் எர்துவான் தெரிவித்திருக்கிறார்.

டிரம்பிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் இந்த அறிவிப்பை, வெளியிட வேண்டாம் என்று வலியுறுத்தும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஜெருசலேமின் தகுதி நிலை பற்றிய அமெரிக்க கொள்கைளை இந்த வாரம் திடீரென அமெரிக்க அதிபர் மாற்றலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையிலான மிகவும் பதற்றமான சிக்கல்களில் ஒன்றாக ஜெருசலேம் உள்ளது.

"டிரம்ப் அவர்களே! ஜெருசலம் முஸ்லிம்களின் சிவப்புக் கோடு" என்று செவ்வாய்கிழமை தொலைக்காட்சி உரையில் எர்துவான் தெரிவித்துள்ளார். "இந்தப் பிரச்சனை தொடர்பாக இஸ்ரேலோடு இருக்கும் ராஜீய உறவை துண்டிக்கும் அளவுக்கு நாங்கள் செல்வோம்" என்று அவர் கூறியுள்ளார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.