head


குளிர் கால ஒலிம்பிக் போட்டியில்: ரஷ்ய வீரர்கள் பங்கேற்க தடை

|Wed 06th December 2017|Security| Page Views : 29

ஊக்க மருந்து விவகாரத்தில் ரஷ்ய வீரர்கள் சிக்கியதால் 2018ம் ஆண்டு குளிர் கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ரஷ்யாவிற்கு சர்வதேச ஒலிம்பிக் அமைப்பு தடை விதித்துள்ளது.

மேலும் ரஷ்யாவில் கடந்த 2014ம் ஆண்டு சோச்சி மாகாணத்தில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன. இதில் ரஷ்ய வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்தியமை தெரியவந்தது. இது தொடர்பாக அந்நாட்டு ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு விசாரணை நடத்தி அறிக்கை ஒன்றை சமர்பித்திருந்தது.

குறித்த அறிக்கையில் ரஷ்ய வீரர்கள் ஊக்க மருந்து பயன்படுத்தியமை உறுதியாகியுள்ளது. இந்நிலையில் சர்வதேச ஒலிம்பிக் அமைப்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் ரஷ்யா ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு அளித்த அறிக்கையின் படி 2018ம் ஆண்டு தென்கொரியாவின் பையோங்சாங்க் நகரில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்ய வீரர், வீராங்கனைகள் பங்கேற்க தடை விதிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

படம் சேகரிப்பு :- ibctamil.com
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.