head


இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை தன்னிச்சையாக அமெரிக்க அதிபர் அறிவிக்கலாம்

|Wed 06th December 2017|Security| Page Views : 16

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக தன்னிச்சையாக அங்கீகரிக்க உள்ளதாக டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், டெல் அவிவ்வில் இருக்கும் அமெரிக்க தூதகரத்தை டிரம்ப் உடனடியாக ஜெருசலேமிற்கு மாற்றமாட்டார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று ஜெருசலேம் விவகாரம் குறித்து டிரம்ப் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது நிர்வாகத்தின் கீழுள்ள மூத்த அதிகாரி இத்தகவலை வெளியிட்டுள்ளார். இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேமிற்கு மாற்றுவது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்று டிரம்ப்பை அரபு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் எச்சரித்திருந்தனர்.

ஜெருசலேமை எப்போதும் தங்கள் தலைநகரமாக இஸ்ரேல் கருதிவந்தது. ஆனால், பாலத்தீனியர்கள் கிழக்கு ஜெருசலேமை எதிர்கால பாலத்தீனிய ராஜ்ஜியத்தின் தலைநகரமாக உரிமை கோரி வருகின்றனர். இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அமெரிக்கா அங்கீகரிக்குமானால், இஸ்ரேலுடனான துருக்கியின் உறவு துண்டிக்கப்படலாம் என்று முன்னர் துருக்கி அதிபர் எச்சரித்திருந்தார்.

இத்தகைய நடவடிக்கை முஸ்லீம்களுக்கான சிவப்புக் கோட்டை தாண்டுவதாக அமையும் என்று துருக்கி அதிபர் ரிசெஃப் தாயிப் எர்துவான் கூறியிருந்தார். இ;ந்த விவகாரம் தொடர்பில் பிரான்ஸ் அதிபர் மக்ரோனும் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறி;ப்பிடத்தக்கது இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசலேமை அமெரிக்கா ஏற்றுக் கொண்டால், பிற சர்வதேச சமூகத்திற்கு மாறுபட்ட நிலைப்பாட்டை எடுப்பதாக அமையும்.

கிழக்கு ஜெருசலேமிலுள்ள இஸ்ரேலிய சமூகத்தின் குடியிருப்புகள் அனைத்தும் சரியானவை என்று வாதிடும் இஸ்ரேலின் நிலைப்பாட்டுக்கு வலிமை சேர்க்கும் என அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.