head


சர்வதேச பயங்கரவாதிகளுக்கு இலங்கைக்குள் இடமில்லை!

|Thu 07th December 2017|Security| Page Views : 55

சர்வதேச பயங்கரவாதிகள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுப்பதற்காக விசேட பாதுகாப்பு பொறிமுறையை முன்னெடுத்துள்ளதாக சட்டம், ஒழுங்குகள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார். இலங்கைக்குள் நுழைவதற்கு வெளிநாட்டு பயங்கரவாதிகளுக்கு இடமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இன்ரபோல் அனுசரணையுடன், கொழும்பு ஹில்டன் ஹொட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச பயங்கரவாதத்தை தடுப்பது தொடர்பான நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்தப் பாதுகாப்புத் திட்டம் குடிவரவு ? குடியகல்வு திணைக்களம், இன்ரபோல் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு ஒழுங்கமைப்பு என்பவற்றை பயன்படுத்தும். உள்நாட்டில் தற்போது எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் மீண்டும் தலைதூக்கும் பயங்கர நிலைமை இல்லை. இருப்பினும் இதளையிட்டு நாம் ஆறுதல் எடுக்கும் நிலைமையில் இல்லை.

தென்கிழக்காசியா, தென்னாசியா பிராந்தியங்களில் பயங்கரவாத தலை எடுத்தள்ள நிலையில் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.

உலக யதார்த்தத்தில் இருந்து தப்பிக்கொள்ளும் அளவுக்கு இலங்கை உள்ளது. சட்ட அமுலாக்கல் பொறிமுறை இன்ரபோல் அடங்கலான தனது சர்வதேச பங்காளிகளின் ஆதரவுடன் வெளிநாட்டு பயங்கரவாத போராளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும் முயற்;சியில் இறங்கியுள்ளது.

நாம் ஏற்கெனவே இன்ரபோலின் குற்றச் செயல்கள் தரவுத் தொகுதியுடன் எமது குடிவரவு முறைமையை இணைத்துள்ளோம். ஒரு பயங்கரவாதி இலங்கைக்குள் வர முயற்சித்தால் அவர் எமது குடிவரவு மற்றும் நாடு கடத்தல் சட்டங்களுக்கு அமையக் கையாளப்படுவர்.

சகல உறுப்பு நாடுகளின் சட்டத்தை நடை முறைப்படுத்தும் அதிகாரிகளுடன் உலக பொலிஸ் தொடர்பாடல் முறைமையை இணைக்க உதவிய இன்ரபோலுக்கு எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம் என அமைச்சர் சாகல ரத்னாயக்க மேலும் தெரிவித்தார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.