head


ஜெருசலேம் விவகாரம்: டிசம்பர் 13ல் இஸ்லாமிய ஒத்துழைப்பு நாடுகளின் அவசர மாநாடு

|Thu,07th November 2017 |Security| Page Views : 33

இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்த அமெரிக்காவின் முடிவு குறித்து விவாதிப்பதற்காக இஸ்லாமிய ஒத்துழைப்பு நாடுகளின் அமைப்பு மாநாட்டை 13ம் தேதி, துருக்கி அதிபர் எர்டோகன் கூட்டியுள்ளார்.

கடந்த 1967-ல் ஜெருசலேமின் கிழக்கு பகுதியை இஸ்ரேல் கைபற்றியது முதல் அந்த நகரின் உரிமை தொடர்பாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே மோதல் நிலவி வருகிறது. அரபு நாடுகள் மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகள் கூட, ஜெருசலேம் பாலஸ்தீன தலைநகர் என்பதை ஏற்க வில்லை.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தை, ஜெருசலேம் நகருக்கு மாற்றும் உத்தரவை இன்று பிறப்பித்துள்ளார்.

தூதரகத்தை மாற்றுவதன் மூலம் இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை, அமெரிக்கா அங்கீகரிப்பதாகி விடும் என அரபு நாடுகளின் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த பிரச்னை தீவிரமடைந்து வரும் நிலையில் இதுபற்றி விவாதிப்பதற்காக இஸ்லாமிய ஒத்துழைப்பு நாடுகளின் மாநாட்டை, துருக்கி அதிபர் எர்டோகன் கூட்டியுள்ளார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.