head


மீசாலையில் டிப்பர் மோதி பெண் மரணம்

|Thursday 7th December 2017|Security| Page Views : 28

நேற்று(06) பிற்பகல் 4.30 மணியளவில் யாழ்-சாவகச்சேரி மீசாலை ஏ9 வீதியில் டிப்பர் வாகனம் மோதி மீசாலையைச் சேர்ந்த 62 வயதுடைய சந்திரபாலன் பரமேஸ்வரி என்ற பெண் உயிரிழந்துள்ளதோடு அவரது கணவன் 67 வயது சின்னையா சந்திரபாலன் படுகாயமடைந்துள்ளார்.

கார் ஒன்றை சோதனை செய்வதற்காக பொலிஸார் மறித்தபோது அதிலிருந்து இறங்குவதற்காக சாரதி கார் கதவைத்திறந்த வேளையில், அதனை விலத்திச் செல்ல முயற்சித்த தம்பதிகள் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் பின்னால் வந்த டிப்பர் வாகனம் மோதியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.