head


809 தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு 22 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது

|Thursday 7th December 2017|Security| Page Views : 38

நாட்டிலுள்ள மூவாயிரத்து 312 பாடசாலைகளுக்கு புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கான 70 கோடி ரூபா நிதியுதவியை பகிர்ந்தளித்து,

பாடசாலைகளுக்கு பரிந்துரைக்கப்படும் நூல்களின் பெயர்கள் அடங்கிய பாடசாலை நூலகப் பட்டியலை வெளியிடும் நிகழ்வு நேற்று (06.12.2017) அலரி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன், சகல மாகாணங்களையும் சேர்ந்த தமிழ் பாடசாலைகளுக்கு பெருமளவு நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்,

மொத்தமாக 809 தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு 22 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.