head


பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு!

|Wed 10th Jan 2018|Security| Page Views : 21

அருணாச்சல பிரதேசத்தில் சீன ராணுவம் சாலை அமைக்கும் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுவிட்டதாக ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

சிக்கிம் மாநிலத்தில் இந்திய எல்லைப் பகுதியான டோக்லாம் பகுதியில் 4 மாதங்களுக்கு முன் சீன ராணுவம் ஊடுருவியது.

இந்தியாவும் படைகளைக் குவித்ததால் பதற்றம் நிலவியது.

பேச்சுவார்த்தைக்குப் பின் சீன ராணுவம் படைகளை வாபஸ் பெற்றுவருகிறது.

இந்நிலையில், அருணாச்சல பிரதேசத்தில் டியூட்டிங் பகுதிக்குள் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை சீன ராணுவத்தினர் சமீபத்தில் ஊடுருவினர்.

அங்கு சாலை அமைக்க இயந்திரங்களுடன் சீன ராணுவத்தினர் வந்தனர்.

தகவல் அறிந்ததும் இந்திய ராணுவத்தினர் அங்கு விரைந்து சென்றனர்.

அதனால், சாலைப் பணிக்காக கொண்டு வந்த பொருட்களை விட்டுவிட்டு சீன ராணுவத்தினர் சென்றதாக செய்தி வெளியானது.

இந்நிலையில், டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத், ??அருணாச்சலில் இந்தியா - சீனா ராணுவத்தின் சார்பில் எல்லை அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் 2 நாட்களுக்கு முன் நடந்தது.

அப்போது அருணாச்சல் எல்லையில் சாலை அமைப்பதில்லை என்று சீனா உறுதி அளித்தது?? என்றார்.

இதையடுத்து சீனா ராணுவத்தினரிடம் கைப்பற்றப்பட்ட சாலை பணிக்கான இயந்திரங்கள் அந்நாட்டிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.