head


அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கால்கோள் விழா ஆரம்பம்!

|Wed 10th Jan 2018|Security| Page Views : 23

அலங்காநல்லூரில் ஜன.16-ம் தேதி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கான கால்கோள் விழா நேற்று நடைபெற்றது.

ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு உலகப்புகழ் பெற்ற, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வரும் 16-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதையொட்டி வாடிவாசல், பார்வையாளர் கேலரி, வெளிநாட்டினர் கேலரி என பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதற்கான கால்கோள் விழா, வாடிவாசல் அருகே உள்ள முத்தாலம்மன் கோயில் வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் பந்தல் அமைப்பதற்கான முகூர்த்தக்காலை நட்டு விழாவைத் தொடங்கி வைத்தார்.

பேரூராட்சி செயல் அலுவலர் ஜூலான் பானு, ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் கலா, நளினா பரமேஸ்வரி, வாடிப்பட்டி வட்டாட்சியர் பார்த்திபன், முன்னாள் ஒன்றியத் தலைவர் ரவிச்சந்திரன், அலங்காநல்லூர் காவல் ஆய்வாளர் அன்னராஜ் மற்றும் ஜல்லிக்கட்டு விழா கமிட்டியினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து வாடிவாசலில் வர்ணம் பூசுதல், மைதானத்தை தூய்மைப்படுத்துவது உள்ளிட்ட பணிகள் தொடங்கின.

இன்று (ஜன.9) மாலை வருவாய், காவல்துறை சார்பில் அலங்காநல்லூர் கிராமச் சாவடியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடுகள் தொடங்கியதால், இப்பகுதி கிராமங்களில் பொங்கல் உற்சாகம் களை கட்டியுள்ளது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.