head


ராணுவ ஒத்துழைப்பு நிறுத்தம்: பாகிஸ்தான் அமைச்சர் தஸ்த்கிர் அறிவிப்பு

|Thu 11th Jan 2018|Security| Page Views : 35

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் தீவிரவாதத்தை ஒடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது தலிபான் தீவிரவாதிகள், ஹக்கானி நெட்வொர் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். பலர் கடத்தப்படுகின்றனர். இதில் அமெரிக்க வீரர்கள் பலர் பலியாகி உள்ளனர்.

தீவிரவாதிகளுக்கு பாகிஸ் தான் தஞ்சம் அளித்து வருகிறது. பாகிஸ்தானில் மறைந்து கொண்டு ஆப்கன் தலிபான்கள் தாக்குதல் நடத்துகின்றனர் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் குற்றம் சாட்டினார். அத்துடன், தீவிரவாதத்தை ஒடுக்குவதற்காக பாகிஸ்தானுக்கு வழங்கிவரும் நிதியுதவியையும் ட்ரம்ப் இந்த ஆண்டு நிறுத்தி வைத்தார்.

பாகிஸ்தானில் அமெரிக்காவுக்கு நிறைய வசதிகள் செய்து கொடுத்திருக்கிறோம். அவற்றில் எதையும் நாங்கள் நிறுத்தவில்லை. ஆனால், ராணுவ மற்றும் புலனாய்வுத் தகவல் பரிமாற்ற ஒத்துழைப்பை நிறுத்தி வைத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையில், ??பாகிஸ்தான் ஒத்துழைப்பு நிறுத்தம் தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை?? என்று இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரக செய்தித் தொடர்பாளர் ரிச்சர்ட் கூறியுள்ளார். - ஐஏஎன்எஸ்
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.