head


கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை ஈரான் விடுவிக்க வேண்டும் - அமெரிக்கா!

|Thu,11th Jan 2018 |Security| Page Views : 38

ஈரான் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்களை விடுவிக்குமாறு அந்நாட்டு அரசை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஈரான் அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

ஆரம்பத்தில் ஈரானில் ஏற்பட்டிருந்த விலையேற்றத்திற்கெதிராக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

தலைநகரில் ஆரம்பித்த இந்த ஆர்ப்பாட்டம், பின்னர் நாடு தழுவிய போராட்டமாக மாறியிருந்ததுடன், அரசாங்கத்திற்கும் அந்நாட்டு மதகுருமார்களுக்கும் எதிரான போராட்டமாக மாறியது.

இதனைக் கலைப்பதற்கு அந்நாட்டு பொலிசார் கடுமையாக நடந்து கொண்டமையால் மோதல் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன.

இந்த மோதல் சம்பவங்களினால், இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதுடன் இந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்குமாறு அமெரிக்கா ஈரான் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.