head


ஆண்களை விட பெண்களின் ஆயுள் அதிகம்

|Friday 12th January 2018|Security| Page Views : 55

ஆண்களைக் காட்டிலும் பெண்கள் அதிக காலம் உயிர்வாழ்தாகவும், இதற்கு அவர்களது உடல் மற்றும் மரபியல் ரீதியான காரணங்கள் இருப்பதாகவும் டென்மார்க் பல்கலைக்கழகமும், அமெரிக்க பல்கலைக்கழகமும் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஆண்களோடு ஒப்பிடுகையில், உடல் வலிமையை வைத்து, பெண்கள் பலவீனமானவர்கள் என சொல்லப்படுவதுண்டு. ஆனால், வாழ் நாட்களை பொருத்தவரை, ஆண்களை விடவும் பெண்கள் அதிககாலம் உயிர் வாழ்வதாக ஏற்கனவே புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், தென் டென்மார்க் பல்கலைக்கழகப் பேராசிரியர் வெர்ஜினியா சருல்லி அவர்களும், அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழகப் பேராசிரியர் (துயஅநள ஏயரிநட) அவர்களும், கடந்த 250 ஆண்டுகளுக்குரிய விவரங்களைத் திரட்டி, ஆய்வு செய்து, தங்கள் கண்டுபிடிப்புக்களை வெளியிட்டுள்ளனர்.

அந்த ஆய்வின் முடிவுகளில் பெண்கள் மரபியல் ரீதியாகவும் சரி, உயிரியல் ரீதியாகவும் வலிமையாக இருக்கின்றனர். இதன் காரணமாகவே, ஆண்களை விடவும், பெண்களுக்கு கூடுதலான ஆயுள் காலம் அதிகம் என்பதை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

பஞ்சம், தொற்று நோய் பாதிப்பு என, பல சூழல்களிலும், ஆண்களை விடவும், பெண்கள், அவற்றை எதிர்கொண்டு, அதிகஅளவில் தாக்குப்பிடித்து வருவதை, புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

பிறந்த குழந்தைகளில் கூட, ஆண் குழந்தைகளோடு ஒப்பிட்டால், பெண் குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைவாகவே உள்ளன. ஆண்களை விடவும், பெண்களின் வாழ்நாள் அதிகரித்து இருக்க மரபியல் ரீதியான காரணங்களும், சுரபிகளும் கராணமாக இருக்கலாம்.

குறிப்பாக எஸ்ரோஜன் ஹார்மோன்கள், அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக வழங்குகிறது. எனவே அவர்கள் தொற்றுநோய் உள்ளிட்டவை பரவும்போது அதை எதிர்கொள்ளும் திறன் அவர்களின் உடலுக்கு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.