head


ஆதார் ரகசியங்களை காக்க 16 இலக்க எண் புதிய நடைமுறை அறிமுகம்

|Friday 12th January 2018|Security| Page Views : 17

ஆதார் விவகாரத்தில் தனி நபர் ரகசியங்கள் பாதுகாக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கு தீர்வு காண்பதற்காக புதிய நடைமுறையை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யு.ஐ.டி.ஏ.ஐ) அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, வரும் நாள்களில் புதிய சிம் கார்டு, வங்கிக் கணக்குத் தொடக்கம் உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பிக்கும்போது ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டியதில்லை.

அதற்குப் பதிலாக 16 இலக்க மெய்நிகர் அடையாள எண்ணைத் தெரிவித்தால் போதுமானது. அந்த எண்ணை இந்திய தனித்துவ அடையாள ஆணைய இணையதளத்தின் வாயிலாக சம்பந்தப்பட்டவர்கள் உருவாக்கிக் கொள்ள முடியும்.

குறிப்பிட்ட காலம் வரை அந்த மெய்நிகர் எண்ணானது செயல்பாட்டில் இருக்கும். அதன் பிறகு புதிதாக மற்றொரு எண்ணை உருவாக்கிக் கொள்ளலாம். கடவுச்சொல் (பாஸ்வேர்டு) போல ஒரு நபர் எத்தனை முறை வேண்டுமானாலும் அந்த எண்ணை மாற்றிக் கொண்டே இருக்கலாம் என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.