head


பொங்கலை முன்னிட்டு தமிழக அரசு அறிவிப்பு

|Friday 12th January 2018|Security| Page Views : 18

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸை அறிவித்து தமிழக அரசு நேற்று அரசாணை வெளியிட்டு உள்ளது.

அதன் படி சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு ரூ.3,000 ஃ- மற்றும் சத்துணவு மற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு ரூ. 1,000ஃ- வழங்கப்படவுள்ளது.

தமிழக அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி போனஸ் வழங்கப்பட்டு வருகிறது.

நிகழாண்டுக்கான பொங்கல் பண்டிகை வருகிற 14-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவித்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.