head


விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி செய்தவர்கள் சுவிற்சலாந்தில் வழக்கைச் சந்தித்துள்ளார்கள்

|Friday 12th January 2018|Security| Page Views : 54

ஸ்ரீலங்கா தமிழ் பிரிவினைவாத குழுவான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு 15 மில்லியன் சுவிஸ் பிராங்குக்கு (15.3 அமெரிக்கன் டொலர்) அதிகமாக நிதியை அனுப்பியதாக பதின்மூன்று நிதியாளர்கள் சுவிஸ் பெடரல் குற்றவியல் நீதி மன்றின் முன்பாக திங்களன்று வழக்கைச் சந்தித்துள்ளார்கள்

குற்றம் சாட்டப்பட்டவர்கள், சுவிஸ்ட்லாந்து, ஜேர்மனி மற்றும் ஸசிறீலங்கா நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்களில் சிலர் 2009 வரை சுவிஸ்ட்லாந்தில் எல்.ரீ.ரீ.ஈ யினை பிரதிநிதித்துவம் செய்த உலகத் தமிழர் ஒருங்கிணைப்பு கழகத்தின் (டபிள்யு.ரி.சி.சி) முன்னாள் உறுப்பினர்கள், மற்றும் அதில் அதன் நிறுவனர், அவரது துணைத் தலைவர் மற்றும் நிதிப் பொறுப்பாளர் ஆகியோர் உள்ளடங்குவர்

1999 மற்றும் 2009 ம் ஆண்டுகளுக்கு இடையில் வங்கிகளிடம் இருந்து கடன் பெறுவதற்கு அவர்கள் தமிழ் புலம் பெயர் உறுதியளிக்கும் உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட ஒரு சிக்கலான நிதி திரட்டும் கட்டமைப்பு ஒன்றை உருவாக்கினார்கள்.

கடன்பெறும் தொகையை உயர்த்துவதற்காக கடன் பெறுபவர்களின் பெயரில் கற்பனையான நிறுவனங்களை உருவாக்கி போலிச் சம்பளச் சான்றிதழ்கள் வழங்கியதாக டபிள்யு.ரி.சி.சி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணையை எதிர்நோக்கும் 13 பேர்மீதும் சமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், மோசடி, தவறான ஆவணம் தயாரித்தல், பணமோசடி, மற்றும் மிரட்டி பணம் பறித்தல் என்பனவாகும்.

எல்.ரீ.ரீ.ஈ சுவிட்ஸ்லாந்தில் ஒரு பயங்கரவாத இயக்கமாக பிரகடனப்படுத்தப்படாத நிலையில் இஸ்லாமிய அரசு அல்லது அல்கைதா சம்பந்தப்பட்ட வழக்குகளைப் போலன்றி, பயங்கரவாத குழுவுக்கு நிதியளித்ததுக்கான குற்றச்சாட்டுகளை அவர்கள் சந்திக்க மாட்டார்கள்.

சட்டமா அதிபர் வலுவாகச் சந்தேகிப்பது, விசாரணையின் கீழுள்ள எல்.ரீ.ரீ.ஈ பிரிவினர் சந்தேகத்துக்குரிய பணத்தை அச்சுறுத்தல் மற்றும் அவர்களை பணத்தைச் செலுத்துவதற்கு தூண்டும் வகையில் பயமுறுத்தல் ஆட்சி ஒன்றை உருவாக்குவதன் மூலம் பெற்றிருக்கலாம் என்று நீதிமன்ற வெளி ஆவண இணைப்பகம் தெரிவிக்கிறது.

சுவிஸில் சேகரிக்கப்பட்ட நிதி பணமாக சிங்கப்பூர் மற்றும் டுபாய்க்கு ஆட்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது இறுதியாக அது ஸ்ரீலங்காவிலுள்ள எல்.ரீ.ரீ.ஈ இனைச் சென்றடைந்துள்ளது,

அவர்கள் இறுதியாக அந்தப் பணத்தை ஆயுதங்கள் கொள்வனவு செய்ய பயன்படுத்தியுள்ளார்கள். 2009ல் எல்.ரீ.ரீ.ஈ, ஸ்ரீலங்கா ஆயுதப்படையினரால் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப் பட்டதுடன் இந்த சேகரிப்பு முறை சரிவடைந்தது.

எல்.ரீ.ரீ.ஈ தமிழர்களின் விடுதலை மற்றும் சுயநிர்ணயத்திற்குப் போராடியது ஒரு குற்றமல்ல,அதேபோல இந்த 13 சந்தேக நபர்களும் வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என நான் நினைக்கவில்லை.

இரண்டு கட்சிகள் போரை நடத்தின அதேபோல ஸ்ரீPலங்கா இராணுவத்தின் யுத்தக் குற்றங்களையும் சுவிஸ்ட்லாந்து விசாரணை செய்ய வேண்டும் என்று ஈழத் தமிழர்களுக்கான சுவிஸ் சபையின் தலைவர் அண்ணா அன்னூர், வியாழனன்று சுவிஸ் தகவல் நிறுவனத்திடம் தெரிவித்தார்.

நீண்ட காலமாக இழுபட்ட கதை இந்த முழு நடவடிக்கையும் 2009ல் எடுக்கப்பட்டது, சட்டமா அதிபர் அலுவலகம், மிரட்டி பணம் பறித்தல், கட்டாயப்படுத்தல், பணமோசடி மற்றும் திட்டமிடப்பட்ட குற்றங்கள் போன்றவற்றில் ஈடுபடும் அடையாளம் தெரியாத சில நபர்களைப் பற்றி ஒரு விசாரணையை மேற்கொண்டது.

2011ல் அநேக சுவிஸ் மண்டலங்களில் நடத்திய ஒரு திட்டமிட்ட நடவடிக்கையின் விளைவாக அநேக சந்தேக நபர்களை கைது செய்ய நேர்ந்தது, மற்றும் பின்னர் அவர்கள் இரண்டு மாத காலத்துக்குள் விடுதலை செய்யப்பட்டார்கள்.

ஒரு வருடத்தின் பின் சட்டமா அதிபர் அலுவலகம் மற்றும் பெடரல் பொலிஸ் அலுவலகம் என்பனவற்றைச் சேர்ந்த தூதுக் குழு ஒன்று சுமார் 15 சாட்சிகளை விசாரிப்பதற்காக ஸ்ரீலங்காவுக்குச் சென்றார்கள்.

சுவிஸ்ட்லாந்தில் வசிக்கும் 80 விகிதமான தமிழர்கள், அந்த நேரத்தில் இனப்படுகொலைக்கு எதிரான போராட்டத்தை ஆதரிப்பதற்காக எல்.ரீ.ரீ.ஈக்கு ஆதரவளிப்பதற்காக பணம் கொடுத்தார்கள்.

அதனால் தமிழர்கள் பயங்கரவாதத்தை ஆதரிப்பது என்று அர்த்தமல்ல என்றார் ஈழத் தமிழர்களுக்கான சுவிஸ் சபையின் முன்னாள் தலைவர் குருபரன் குருசாமி. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கான வழக்கு வழசாரணை ஆரம்பத்தில் ஜூன் 2017ல் நடத்துவதற்குத் தீர்மானிக்கப் பட்டது.

எனினும் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில் ஒருவரது வழக்கறிஞர், நிதி பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ள வங்கியொன்றும் நீதிபதியால் குற்றவாளிகளில் ஒருவராகக் குறிக்கப்பட வேண்டும் கோரிக்கை வைத்தார்.

குருசாமி சொல்வதின்படி சந்தேகிக்கப்படும் வங்கி கிரெடிட் சூசி என்றும், ஜேர்மனியை தளமாகக் கொண்ட ஒரு ஸ்ரீலங்காப் பிரஜையின் பெயரில் 135 கடன் விண்ணப்பங்களை அது ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும் மேன்முறையீட்டு மத்திய குற்றவியல் நீதி மன்றம் அந்த கோரிக்கையை நிராகரித்ததுடன் வழக்கு விசாரணையை மேலும் தொடர்ந்து நடத்த அனுமதியளித்தது. மார்ச் மாத நடுப்பகுதியளவில் தீர்ப்பு எதிர்பார்க்கப் படுகிறது.

ஸ்ரீலங்காவை சேர்ந்த சுமார் 50,000 பேர்கள் சுவிஸ்ட்லாந்துவில் வசிக்கிறார்கள், பெரும்பாலானவர்கள் தமிழ் இனத்தவர்கள், 2009ல் முடிவடைந்த 30 வருட உள்நாட்டு யுத்தம் காரணமாக அவர்கள் அந்த தீவிலிருந்து வெளியேறியவர்கள்.

பலர் சுவிஸ்ட்லாந்து குடியரிமைக்கு விண்ணப்பித்துள்ளார்கள் மற்றும் 2016ம் ஆண்டு கணக்கின்படி 28,000 க்கு சற்று அதிகமான ஸ்ரீPலங்காப் பிரஜைகள் சுவிஸ்ட்லாந்தில் வசிக்கிறார்கள்.

2016ல் சுவிஸ்ட்லாந்து அரசாங்கம,; ஸ்ரீலங்கா நாட்டவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்குவதற்கு கடுமையான நிபந்தனைகள் கடைப்பிடிக்கப்படும் என அறிவித்துள்ளது.- - ஆனந்த் சந்திரசேகர்-
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.