head


அங்கஜன் இராமநாதனின் பிரதிநிதித்துவத்திலான தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்பட்டது

|Friday 12th January 2018|Security| Page Views : 57

நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் பிரதிநிதித்துவத்திலான தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்பட்டது.

?ஓன்றிணைந்த கிராம எழுச்சி எமது இனத்தின் வளர்ச்சி? எனும் கருத்திட்டத்திலான அபிவிருத்தி திட்டத்தினை உள்ளடக்கியதாக தேர்தல் விஞ்ஞாபனம் அமைந்துள்ளது.

யாழ்.மானிப்பாய் வீதியில் உள்ள பிள்ளையார் இன் விருந்தினர் விடுதியில், இன்று (12) நடைபெற்ற இந்த நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கட்டவேலி 18 ஆம் வட்டார வேட்பாளரான கந்தையா வைத்தியநாதனிடம் தேர்தல் விஞ்ஞாபனத்தினை வழங்கி வெளியிட்டு வைத்தார்.

இதுவரை உரிமை கோரப்படாது இருக்கும் காணிகளில் பொதுச் சந்தை, சங்கங்கள் முன்பள்ளிகள் மகிழ் பூங்காக்கள் அமைத்தல், சிறுவர் துஸ்பிரயோகங்களுக்கும், சமூக பிறள்வுகளுகு;கும் ஏதவான கிராம சூழலை இல்லாதொழித்து சமூக நல மாற்று இடங்களை உருவாக்குதல், சபையின் வருமானத்தினை பல்வேறு வழிகளிலும் அதிகரித்து அதன் ஒரு பகுதியை சபையின் அனுமதியுடனும் வருடாந்த வரவு செலவு திட்டத்தின் ஊடாக,

காணாமல் போனோர்களின் குடும்த்திற்கு உதவுதல். போசாக்கில்லாத குழந்தைகளுக்கு போசக்குணவு கொடுத்தல். வீடமைப்பு, புனரமைப்பு, கடன்வசதிகளை ஏற்படுத்தல், நூலக வசதிகளை ஏற்படுத்துதல், மின்சாரம் பெற்றுக்கொடுத்தல், கிணறுகள்,

பொதுக்கிணறு அமைத்தல், போரினால் விதவைகளாக்கப்பட்ட மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு சுயதொழில் வாய்ப்பு அல்லது கூட்டுத் தொழில் செய்ய வழிவகை செய்தல்.

நகரசபை மற்றும் மாநகர சபை வளங்களைப் பயன்படுத்தும் தொழில் வாய்ப்புக்களை அந்தந்த சபை எல்லைக்குள் இருக்கும் படித்த இளைஞர் யுவதிகளுக்கும் துறைசார்அனுபவம் உள்ளவர்களுக்கும் மட்டுமே வாய்ப்பளித்தல்.

கிராமம் தோறும் காணப்படும் பாதுகாப்பற்ற புகையிரதக்கடவைகளை சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் அதிகாரிகளுடன் பேசி பாதுகாப்பான புகையிரதக் கடவைகளை அமைத்தல், உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை உள்ளடக்கியதாக தேர்தல் விஞ்ஞாபனம் உருவாக்கப்பட்டு, மக்களுக்கு தெளிவூட்டுவதற்கா வேட்பாளர்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.