head


டி.எஸ்.சேனநாயக்கா எதிர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கா: கட்டுப்பாட்டை கைப்பற்றுவதற்கான யுத்தம்

- கே.கே.எஸ்.பெரேரா தமிழில்- எஸ்: குமார்

ஐதேக வின் 70ம் பிறந்தநாளும் எஸ்.டபிள்யு.ஆர்.டி யின் 119ம் பிறந்த நாளும்


|Friday 12th January 2018|Security| Page Views : 60

?என்; நட்சத்திரங்களே நான் உங்களுக்கு மேலே இருக்கிறேன், ஆனால்மேன்மையைக் கண்டு நான் அச்சப்படவில்லை: சிலர் பிறப்பால் மேன்மையுடையவர்களாகிறார்கள், மற்றும் சிலர் அவர்கள்மீது செலுத்தப்படும் உந்துதலால் மேன்மையை அடைகிறார்கள் - மல்வோலியோ 12ம் இரவு நாடகத்தில் நடிப்பு 2 - காட்சி 5.

ஷேக்ஸ்பியரின் தத்துவத்தைப் போலவே டொன் ஸ்ரீபன் சேனநாயக்கா மேன்மையானவராகப் பிறக்கவில்லை, ஆனால் மேன்மைக்கு மேல் மேன்மைகளை அடைந்தார், ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அவர்மீது உந்துதலும் செலுத்தப்பட்டது, ஆனால் சிறிய சொலமன் வெஸ்ட் றிட்ஜ்வேயின் விடயத்தில் அந்த தத்துவம் முற்றாகப் பிரயோகமானது. அவரது தந்தையான சேர். சொலமன் டயஸ் பண்டாரநாயக்கா கவர்னர் ஜோசப் வெஸ்ட் ரிட்ஜ்வேயின் மகா முதலியாராக இருந்தார் அதனால் அவரது பெயர் எஸ்.டபிள்யு.ஆர்.டிக்கு வைக்கப்பட்டது, அதனால் அவர் மேன்மையானவராகப் பிறந்து, மேன்மைகளை அடைந்தார் மற்றும் மேன்மைகளுக்கான உந்துதல்களும் அவர்மீது செலுத்தப்பட்டன.

உயர்குல குடும்பத்தில் பிறந்த பண்டாரநாயக்காவின் பாடசாலைப் பிரவேசத்தை பொறுத்தமட்டில் டி.எஸ். சேனநாயக்காவுடன் ஒப்பிடுகையில் மிகவும் மேற்கத்தைய ரீதியில் அமைந்திருந்தது. இருவரும் சென்ட்.தோமஸ் கல்லூரியில்தான் கல்வி கற்றார்கள், ஆனால் டி.எஸ் தங்கியிருத்த பொது விடுதியில் இல்லாமல் எஸ்.டபிள்யு.ஆர்.டி, விடுதி மேற்பார்வையாளரின் வீட்டில் தங்கியிருந்தார். ஜனவரி 8, 1899ல் சியனே கோரளையைச் சேர்ந்தவர்களான, காலனித்துவ முதலாளித்துவத்தின் ஒளியாகத் திகழ்ந்த சேர்.சொலமனுக்கும் மற்றும் லேடி டயஸ் ஒபயசேகராவுக்கும் பிறந்த குழந்தைக்கு ஆளுனரான சேர்.ஜோசப் வெஸ்ட் றிட்ஜ்வே தான் ஞ}னத் தந்தையாக இருந்தார். முரண்பாடாக, இந்த உயர்குல பாரம்பரியம் சரிவடைவதற்கு எஸ்.டபிள்யு.ஆர்.டி, அவர்கள்தான் பொறுப்பாக இருந்தார்.

இளைஞரான வெஸ்ட் றிட்ஜ்வே ஒக்ஸ்போட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார், அங்கு அவர் புத்திசாலியான மாணவர்களில் ஒருவர் என்கிற சிறப்பினைப் பெற்றார், தனது பேச்சுத் திறமையால் ஆங்கிலேயர்களையே அவர் அதிசயப்பட வைத்தார், ஆனால் அவர் திரும்பி வந்தபோது அவரது தாய்மொழியில் ஒரு வார்த்தையைக்கூட அவரால் உச்சரிக்க முடியவில்லை.

போத்தலே சேனநாயக்காக்கள்

சிறதளவே அறியப்பட்ட போதலேயை சேர்ந்த கபத்திகம கோரளே, டொன் பரத்தலோமு சேனநாயக்கவுக்கு ஸ்பேட்டர் என்றொரு மகன் இருந்தார். டொன் ஸ்பெட்டர், தனது பதின்ம வயதுகளிலேயே கிராபைட் தொழில்துறையில் ஈ:டுபட்டதுடன் அதில் கிடைத்த இலாபத்தை தோட்டத்தொழில்துறை மற்றும் சாராய வாடகை என்பனவற்றில் முதலீடு செய்தார். அவர் ஆயிரக்கணக்கான ஏக்கர்களுக்கு சொந்தக்காரரானார். (அர்னோல்ட் 1907 பக்கங்கள் 611ஃ614).

எனினும் ஸ்பேட்டர் நூற்றாண்டு; மாற்றத்தின்போது சாராய வாடகைக்கு விடை கொடுத்ததோடு சாராய எதிர்ப்பு பிரச்சாரகராகவும் ஆனார், அவர் தனது மகன்களான டி.சி, எப்.ஆர் மற்றும் டி.எஸ் ஆகியோரை மது அருந்தாதவர்கள் இயக்கத்தில் இணைத்ததுடன் அதேபோல அரசியலிலும் கால் பதிக்கவும் செய்வித்தார். பல சிங்கள பௌத்த தலைவர்களுடன் தங்கள் தந்தையால் ஆரம்பிக்கப்பட்ட மது அருந்தாதோர் இயக்கத்தில் தங்களது மிக இளம் வயதான இருபதுகளிலேயே அங்கத்தவர்களான இவர்கள் காலனித்துவ முதலாளிகளின் கோபத்துக்கு ஆளானார்கள். இலங்கையின் ?முக்கியவத்துமற்ற? முதலாளி வர்க்கம் என முத்திரை குத்தப்பட்ட சேனநாயக்காமார்கள், சாராய எதிர்ப்பு இயக்கத்துக்காக பகட்டாகச் செலவு செய்தார்கள்.

எஸ்.டபிள்யு.ஆர்.டி, யின் தந்தையும் மகா முதலியாருமான சேர்.சொலமன் டயஸ், 1915 கலவரங்களின்போது ஹொரகொல்லயில் பிரித்தானியர்களுடன் உண்டும் குடித்தும் களித்த சால்மரின் இரகசிய உதவியாளராக இருந்தார். 1915ல் சட்ட சபையில் ஒரு அங்கத்தவராக இருந்த எஸ்.டபிள்யு.ஆர்.டி யின் தாய்வழி மாமனான எஸ்.சி ஒபயசேகர, இந்த கலவரம் பற்றிய விவாதத்தில் பேசும்போது சேனநாயக்காக்கள் பற்றி இகழ்ச்சியான கருத்தைத் தெரிவித்தார் ?? ஏழை விவசாயிகள் மற்றும் கிராமத்தவர்கள் சில ?முக்கியமற்றவர்களின்? தனிப்பட்ட வளர்ச்சிக்காக ஏமாற்றப்பட்ட ஒரு பொறியில் சிக்கியுள்ளார்கள், இந்த ஏதுமற்றவர்கள் தங்களை முக்கியமானவர்களாக ஆக்கிக் கொள்ளும் நம்பிக்கையில் இத்தகைய இழிவான தந்திரங்களில் ஈடுபட்டுள்ளார்கள்? ஹன்சார்ட் - ஓகஸ்ட் 11, 1915 இல் 442ம் பக்கம்.

ஐக்கிய தேசியக் கட்சி

அந்த நாளில் இருந்த மூன்று சக்தி வாய்ந்த அரசியல் கட்சிகளான இலங்கை தேசிய காங்கிரஸ் இது ஒரு வலுவான அரசியல் அமைப்பு, பண்டாரநாயக்காவின் சிங்கள மகா சபை மற்றும் ரி.பி ஜயாவின் முஸ்லீம் லீக் ஆகியவற்றின் சந்ததியாக ஐக்கிய தேசியக் கட்சி உதயமாகியது. அவர்கள் 1947ல் நாட்டில் நடைபெற்ற முதலாவது பாராளுமன்றத் தேர்தல்களில் ஐ.தே.க வை வெற்றியை நோக்கி வழி நடத்தினார்கள்.

1946ல் டி.எஸ் தேசிய கட்சியின் பிரச்சினை பற்றி சிந்தித்தார், சிறபான்மையினரால் ஏற்றுக்கொள்ளப்படும் அப்படியான ஒரு கட்சி மிதமான கருத்துக்களை கொண்ட தேசிய கருத்தொருமிப்பை பிரதிநிதித்துவப் படுத்த வேண்டும். காங்கிரஸ் சிறுபான்மையினரின் ஆதரவை இழந்துவிட்டது, அதைத் திரும்பவும் மறுபரிசீலனை செய்யமுடியாத அளவுக்கு அது இருப்பதாகவும் அவர் நினைத்தார். இலங்கை தேசிய காங்கிரசில் உள்ள அநேகமான அங்கத்தவர்கள் மற்றும் சட்ட சபையில் உள்ள அனைவரும் 1947 பாராளுமன்ற தேர்தல் நிகழ்வில் ஐ.தே.க வினை உருவாக்கும் அவரது அழைப்பை ஏற்றுக் கொண்டார்கள். டி.எஸ் இனது புகழ் மற்றும் பலம் என்பன வெகுஜன ஆதரவை இழுத்த அதே சமயம், எஸ்.டபிள்யு.ஆர்.டி இந்த யோசனையை பலப்படுத்துவதற்காக தனது சிங்கள மகா சபையை அதற்குள் கொண்டுவர முடிவு செய்தார். கிறீஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் போன்ற பல்வேறு இன மற்றும் மதக் குழுக்களும் புதிய கட்சியைச் சுற்றி அணிவகுத்தன.

ஐ.தே.க வின் தொடக்க விழா: அசல் கூட்டக் குறிப்புகள் பதிவு

அல்பட் கிறசன்ட், பாம் கோர்ட்டில் 1946 செப்ரம்பர் 6, பி.ப 5 மணியளவில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆரம்பக் கூட்டம் நடைபெற்றது. கீழ்கண்ட தீர்மானமான ?ஐக்கிய தேசியக் கட்சி என்கிற அரசியல் கட்சியை உருவாக்கும் தீர்மானம் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படுகிறது? என்பதை சட்ட சபை அங்கத்தவரான எஸ் நடேசன் முன்மொழிய சட்ட சபை அங்கத்தவரான ரி.பி. ஜயா வழி மொழிந்தார். இந்தப் பிரேரணை சபையின் அனுமதிக்கு விடப்பட்டு அது ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

கூட்ட அமைப்பாளரான கேணல். ஜே.எல்.கொத்தலாவல அங்கத்தவர்களை வரவேற்று கூட்டத்தைப் பற்றி அறிவிக்கும் கடிதங்களை வாசித்தார் (370 அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டதில் 301 பேர் இணைவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார் - சிலோன் டெய்லி நியுஸ்: 7.9.46) அதன் பின் அவர் தலைமை ஆசனத்தை ஏற்றுக் கொள்ளும்படி டி.எஸ்க்கு அழைப்பு விடுத்தார். டி.எஸ் அதை ஏற்றுக்கொண்டு கூட்டத்தில் உரையாற்றினார் மற்றும் கட்சியின் இலட்சியம் மற்றும் நோக்கம் பற்றி அவர் விளக்கமளித்தார். அவர் மேலும் தீவில் வாழும் சமூகங்கள் அனைத்துக்கும் இடையே ஒற்றுமை அவசியம் என்பதின் முக்கியத்துவத்தைப் பற்றியும் அவர் விளக்கினார். அவர் மேலும் பரஸ்பர நம்பிக்கை மற்றும் நல்லெண்ணம் தேவை என்று கேட்டுக்கொண்டதுடன், ஐ.தே.க நாட்டின் வலுவான அரசியல் சக்தியாக இருக்கும் எனவும், மக்களின் எதிர்கால இலக்குகளை வடிவமைப்பதில் மிக முக்கிய பாத்திரத்தையும் வகிக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

கூட்டம் அடுத்ததாக எடுத்த தீர்மானம் ?இந்தக் கூட்டம் கட்சியின் அறிக்கை மற்றும் யாப்பு என்பனவற்றை ஏற்றுக்கொள்கிறது? என்பதாகும் இதை சட்டசபை அங்கத்தவர் பிரான்சிஸ் மொலமுரே முன்மொழிய மற்றொரு சட்ட சபை அங்கத்தவரான ஏ.ஆர்.ஏ ராசிக் வழி மொழிந்தார். பின்னர் அலுவலர்களைக் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது - டி.எஸ் ஆசனத்தை விட்டு எழுந்ததும் எஸ்.டபிள்யு.ஆர்.டி அந்த நேரத்துக்காக ஆசனத்தை ஏற்றுக்கொண்டார் மற்றும் ஒரு சிறிய உரையை வழங்கியதின் பின்னர் டி.எஸ் சேனநாயக்கா அவர்களை கட்சியின் தலைமைப் பதவிக்கு பிரேரித்தார், ஜோர்ஜ் ஈ. டி சில்வா அதை ஆமோதித்தார் மற்றும் அது ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

டி.எஸ் கட்சியின் துணைத் தலைவர்களாக, திருவாளர்கள். பண்டாரநாயக்கா, கொத்தலாவல, ஜோர்ஜ் ஈ.டி சில்வா, ஏ மகாதேவா மற்றும் ரி.பி ஜயா ஆகியோர்களின் பெயர்களை தேர்தல் சபையிடம் பிரேரித்தார் இதுவும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

எஸ்.டபிள்யு.ஆர்.டி க்கு எதிரான நடவடிக்கை

எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்கா அரசாங்கம் மற்றும் ஐ.தே.க வின் இரண்டாவது கட்டளையிடும் தலைவராக இருந்தார், டைம்ஸ் ஒப் சிலோன் பத்திரிகை (ஆகஸ்ட்8,1949) அவதூறான கருத்துக்களை அவர் கட்சியைக் குறித்து பயன்படுத்தினார் என அறிவித்திருந்தது. சில மணித்தியாலங்களுக்குள்;; கட்சியின் தலைவரும் மற்றும் ஒழுங்குமுறை அதிகாரியுமான பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கா அவசர விடயமாக இதைக் கையாழும்படி கட்சியின் நடவடிக்கை குழுவைப் பணித்தார்.

அதே மாலை 9.00 மணியளவில் நடவடிக்கை குழு அலரி மாளிகையில் கூடியது, ஏழு நாட்களுக்குள் நடவடிக்கை குழுவிடம் விளக்க அறிக்கை வழங்குமாறு அங்கு பண்டாரநாயக்காவிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

கூட்ட அறிக்கையின் பகுதியில் பின்வருமாறு குறிப்பிடப் பட்டிருந்தது:?நடவடிக்கை குழுவின் கூட்டம் 1949 ஓகஸ்ட் 8, 9.15 மணியளவில் அலரி மாளிகையில் நடைபெற்றது. டி.எஸ் சேனநாயக்கா அதற்கு தலைமை தாங்கினார் - சமூகமளித்தவர்கள்: எஸ்.டபிள்யு.ஆர்.டி (தாமதமாக வருகை) சேர் ஜோண் கொத்தலாவல, ரி.பி ஜயா, ? சில நிமிடங்களின் பின் சேர்.ஜோண் சபையின் முன்பாக மிகவும் அவசரமானதும் மற்றும் முக்கியமானதுமான ஒரு விடயத்தை கொண்டு வர விரும்பினார்..? என்று.

அவர் குழுவின் முன்பாக டைம்ஸ் ஒப் சிலோன் 8ந்திகதிய பதிப்பின் ( அன்றைய தினம்) பிரதி ஒன்றைச் சமர்ப்பித்து அதில் பிரசுரமாகியிருந்த சிங்கள மகா சபையில் எஸ்.டபிள்யு.ஆர்.டியினால் மேற்கொள்ளப் பட்டதாகச் சொல்லப்படும் உரையினை வாசித்தார் மற்றும் இந்த பேச்சு பற்றி நடவடிக்கை குழு ஏதாவது நடவடிக்கை எடுப்பதற்கு அக்கறை கொண்டுள்ளதா என்று சபையிடம் கேட்டார், அந்த உரை கட்சியின் நலனுக்கு மிகவும் கேடு விளைவிப்பதாக உள்ளது என அவர் வலியுறுத்தினார் ?.அங்கு சமூகமளித்திருந்த அனைத்து உறுப்பினர்களும் இணைந்து ஒரு பொதுவான ஆலோசனை நடத்திய பின்னர் கீழ் கண்ட தீர்மானம் செயற்படுத்துவதற்காக ஒருமனதாக நிறைவேற்றப் பட்டது.

1.? அந்தக் கருத்தில் ?. அந்தப் பேச்சு ?. கொண்டிருந்தது (அ) விடயங்கள் உண்மைக்குப் பொருந்தாததும் மற்றும் (ஆ) தெரிவித்த கருத்துக்கள் (அல்லது கொண்டுவரத் திட்டமிட்டது)கட்சியை கேலிக்குரியதாக்கி குழப்பமடையச் செய்கிறது, இதனால் கட்சிமீது பொதுமக்கள் கொண்டுள்ள நம்பிக்கை குறைமதிப்புக்கு உட்படுகிறது.

2.இந்த விடயத்தை நாங்கள் 15.8.49ல் அலரி மாளிகையில் நடைபெற்ற வழமையான நடவடிக்கை குழுவின் மாதாந்தக் குழுக் கூட்டத்தில் கொண்டு வந்து நடவடிக்கையை மேற்கொள்வதை பரிசீலிக்க வேண்டுகிறோம்?

3.பத்திரிகை அறிக்கை சரியானதா என விசாரித்து செயலாளர், எஸ்.டபிள்யு.ஆர்.டி அவர்களுக்கு உடனடியாக எழுதவேண்டும்?. அவரை ஒரு அறிக்கை வெளியிடுமாறு செய்ய வெண்டும் ? இது சம்பந்தமாக அடுத்த கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

எஸ்.டபிள்யு.ஆர்.டியின் பதில் ஆகஸ்ட் 15ல் நடைபெற்ற மாதாந்தக் கூட்டத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அவர் எழுதியிருந்தது, பத்திரிகை அறிக்கை சில அம்சங்களை வெளியிடுவதில் தவறான தகவல்களை வழங்கி சில தவறான எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் கடிதத்தில் பிரதானப்படுத்தி எழுப்பப்பட்டிருந்த கருத்துக்களைப்பற்றி டைம்ஸ் ஒப் சிலோன் பத்திரிகைக்கு கடிதம் எழுதுவதற்கு நடவடிக்கைக் குழு முடிவு செய்தது. எஸ்.டபிள்யு.ஆர்.டி யிடம் ஒரு காரணம் வலியுறுத்தப்பட்டது.

?கட்சியின் தேர்தல் குழுவின் முன்னால் எந்த முக்கியமான கேள்வியும் வைக்கப்படவில்லை, அது ஒருபோதும் கூடியதுமில்லை. வருட முடிவில் அங்கத்தவர்கள் ஆமாம் சாமி பாத்திரத்தையே வகிக்கவேண்டி உள்ளது - அதற்கு எஸ்.டபிள்யு.ஆர்.டி பதிலளித்தது, ?நான் சொன்னது, இலங்கையிலுள்ள கட்சிகள் கடந்த காலம் மற்றும் நிகழ்காலம் ஆகிய இரண்டிலும் போதுமான அளவு கட்சி அமைப்புகளைக் கலந்தாலோசிக்காத ஒரு போக்கையே கடைப்பிடித்து வருகின்றன மிகவும் முக்கியமான கேள்விகள் எழும்போது, ஐ.தே.க வும் அதே போக்குக்கு உட்படுகிறது மற்றும் அதன் சிறந்த நலன்களுக்காக இது மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று?. இந்த விளக்கம் ஏற்றுக் கொள்ளப்பட்டது (ஐ.தே.க வின் அசல் குறிப்புகள் - நன்றி ஜே.ஆர்.ஜெயவர்தனா மையம்)

இரண்டு தலைவர்களும் பாரம்பாரிய படைகளின் பாதுகாவலர்களாக இருந்தார்கள், அவர்களது இணைந்த படைகளின் உழைப்பால், 1947ல் சோல்பரி அரசியலமைப்பின் கீழ் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஐ.தே.க விற்கு வெற்றி கிடைத்தது. எனினும் இரண்டு உயர் மட்டத்தினரதும் தனிநபர் ஆளுமை மற்றும் கொள்கை மோதல்கள் காரணமாக அது மோசமடைந்தது. பிளவு ஏற்படுவதற்கு முதல் அறிகுறியாக எழுந்தது முன்பு குறிப்பிட்ட பண்டாரநாயக்காவின் வக்கிரமான கருத்துக்கள் ஆகும், அது படிப்படையாக வளர்ச்சி பெற்று பெரிய பிளவாக மாறி ஜூலை 1951ல் ஒரு பெரிய பிரிவினையாக மாறியது.

?இந்தச் சந்தர்ப்பத்தில் நான் எந்த எதிர்க் குற்றச்சாட்டுகளிலோ அல்லது தனிப்பட்ட கசப்புணர்விலோ ஈடுபட விரும்பவில்லை - இதில் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மிகவும் முக்கியமானவைகள் -- நான் ஆரம்பத்தில் ஐ.தே.க வின் உருவாக்குவதற்கு உதவி செய்தபோது சிங்கள மகா சபையை அதில் இணைவதற்கு வற்புறுத்தினேன், மேலும் நான் தற்போதைய அரசாங்கத்தில் சேவையாற்ற இணங்கியது எதனாலென்றால் அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையை உறுதிசெய்வதற்காகவே, குறிப்பாக சுதந்திரத்தின் புதிய சகாப்தத்தின் தொடக்கத்தில் அது அவசியமான ஒன்றாக இருந்தது. இந்த வழியில் சிந்திப்பதிலும் மற்றும் செயற்படுவதிலும் எந்த முக்கியமான மாற்றமும் எனக்குத் தோன்றவில்லை?? பண்டாரநாயக்காவின் கட்சி மாற்றப் பேச்சு - ஹன்சார்ட் 12.07.1951.

சேனநாயக்கா - பண்டாரநாயக்கா பகைமை

அமைச்சரவைக் கூட்டங்களில் டி.எஸ், பண்டாரநாயக்காவை துன்புறுத்துவதற்கு கொத்தலாவலையை பயன்படுத்தினார், பல சந்தர்ப்பங்களிலும் மதி நுட்பம் மிகுந்த பண்டாரநாயக்கா மிகவும் எச்சரிக்கையுடன் நடந்துகொண்டார், இந்த தந்திரம் பூமரங் போல மாறியது, தனது நிலைப்பாட்டின் மோசமான பிரதிபலிப்பை தவிர்ப்பதற்காக பழியை தனது விசுவாசமான மருமகன் லயனல் மீதே சுமத்துவதற்கு டி.எஸ் இனை நிர்ப்பந்தித்தது (சேர். ஜோணின் தாயும் மற்றும் டி.எஸ் இனது சகோதரர் மனைவியும் சகோதரிகள்).

டி.எஸ் மற்றும் எஸ்.டபிள்யு.ஆர்.டி இடையேயான பகைமை பொய்யான ஒன்று, அது பழைய போர்வீரர்களின் அரசியல் தந்திரம், அதேவேளை டி.எஸ் தனது மகன் டட்லியை தனக்குப் பின் கடிவளத்தை கைப்பற்றுவதற்காக தயாராக்கி வந்தார், அதேவேளை எஸ்.டபிள்யு.ஆர்.டி துணைப் பிரதமராகும்(ஒரு புதிய பதவியை உருவாக்கி) ஆர்வத்தில் இருந்தார். ஒக்ஸ்போட் பரிஸ்டருக்கு தனக்காக என்ன களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்ள அதிக நேரம் பிடிக்கவில்லை. இந்த சோகம் 1951ன் நடுப்பகுதி வரை காத்திருந்தது, இறுதியாக அவர் கட்சியில் இருந்து பிரியாவிடை பெறுவதற்காக தனது மனதை தயார்படுத்திக்கொண்டு ஸ்ரீ.ல.சு.க வை நிறுவினார்.

.தே.க வினை உருவாக்குவதற்கு டி.எஸ்க்கு பண்டாரநாயக்காவின் உதவி தேவையாக இருந்த போதிலும் இயற்கையான விருப்பு மற்றும் வெறுப்புகளுக்கு அப்பால் அவர் தனது ஒதுக்கீடுகளை வைத்திருந்தார், அதை அவர் தனது மனதில் உள்ள தனிப்பட்ட நலன்கள் மற்றும் கடந்தகால நினைவுகள் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தினார்.

நன்றி - தேனீ
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.