head


கலைப்பீட மாணவர்களுக்கு மறு அறிவித்தல் வரும் வரை வகுப்புத்தடை

|Friday 12th January 2018|Security| Page Views : 47

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சட்டம் மற்றும் இராமநாதன் நுண்கலைக் பீடம் தவிர்ந்த ஏனைய கலைப்பீட 3ம் மற்றும் 4ம் வருட மாணவர்களுக்கு மறு அறிவித்தல் வரும் வரை வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் ரட்ணம் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் பிற்பகல் 3ம் மற்றும் 4ம் வருட மாணவர்களுக்கு இடையே இடம்பெற்ற மோதல் இடம்பெற்றது. இதில் மூன்று மாணவர்கள் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்தே 3ம் மற்றும் 4ம் வருட மாணவர்கள் பல்கலைக்கழக உட் பிரவேசிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் முதலாம் இரண்டாம் வருட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.