head


பதவியை விட்டுச் செல்ல தயார் ? மைத்திரிபால சிறிசேன

|Saturday 13th January 2018|Security| Page Views : 51

இன்றைய தினமே ஜனாதிபதி பதவியை விட்டுச் செல்ல தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.தனது பதவிக் காலம் தொடர்பில் உச்ச நீதிமன்றினால் வழங்கப்படும் எந்தவொரு சட்ட விளக்கத்தையும் ஏற்றுக்கொள்ளத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அக்குரஸ்ஸவில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பதவி வகிக்க கூடிய காலம் பற்றி இரண்டு விதமான கருத்துக்கள் வெளியிடப்பட்டதனால் சட்ட விளக்கம் கோரியதாகவும் எத்தனை ஆண்டுகள் ஆட்சி நடத்த வேண்டுமென கோரவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிரந்தரமாக ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கு தாம் ஒரு போதும் திட்டமிடவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.