head


தபால் மூல வாக்களிப்புக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகம் ஆரம்பம்

|Saturday 13th January 2018|Security| Page Views : 46

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வடமாகாண மாவட்டங்கள் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கான தபால் மூல வாக்காளர் அட்டைகள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்புக்கான வாக்காளர் அட்டைகள் நேற்று மாவட்டங்களுக்கு விநியோகிக்கப்படும் பணிகள் ஆரம்பமாகின.

இதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஆர்.எம்.ஏ.எல்.ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

குருநாகல், கம்பஹா மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கான தபால்மூல வாக்களிப்புக்கான அட்டைகள் இன்று தபாலில் சேர்க்கப்படும் என்றும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

ஏனைய மாவட்டங்களுக்கான தபால்மூல வாக்களிப்பு அட்டைகள் நாளைய தினம் தபாலில் சேர்க்கப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.