head


இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக 4 மூத்த நீதிபதிகள் போர்க்கொடி

|Saturday 13th January 2018|Security| Page Views : 18

உச்சநீதிமன்ற நிர்வாகத்தில் குறைபாடுகள் இருப்பதாகவும், அதனை சரிசெய்ய தலைமை நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் கடிதம் எழுதியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை உச்ச நீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர் உள்ளிட்ட நான்கு மூத்த நீதிபதிகள் குற்றஞ்சாட்டியுள்ளார்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் லோகூர் மற்றும் குரியன் ஜோசஃப் ஆகியோர் டெல்லியில் நீதிபதி செல்லமேஸ்வர் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

இந்திய வரலாற்றில் முதன்முறையாக பதவியில் உள்ள நான்கு நீதிபதிகள் செய்தியாளர்களை சந்தித்திருப்பது இதுவே முதல்முறையாகும் பல்வேறு முக்கிய வழக்குகளை விசாரிக்கும் அமர்வு உள்பட பல சர்ச்சைகளை அவர்கள் தலைமை நீதிபதியின் கவனத்துக்குக் கொண்டு சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கள் கவலையையும் ஆட்சேபத்தையும் தலைமை நீதிபதியின் கவனத்துக்கு முன்னதாகவே கொண்டு சென்றும் கவனிக்கப்படவில்லை என்றும், நேற்று காலையும் அவரிடம் இதுகுறித்து எடுத்துரைக்கப்பட்டும் அது கவனிக்கப்படவில்லை என்றும் நீதிபதிகள் புகார் கூறினார்கள்.

தலைமை நீதிபதிக்கு அவர்கள் ஏற்கெனவே எழுதிய ஏழு பக்க கடிதத்தில், தலைமை நீதிபதி எந்த வழக்குகளை எந்த அமர்வு கையாள்வது என்று ஒதுக்கீடு செய்து, நீதிமன்ற நடைமுறைகள் குளறுபடியின்றி நடைபெறுவதை செயல்படுத்தும் அதிகாரம் படைத்தவர் என்றாலும், உச்ச அதிகாரம் படைத்தவர் அல்ல என்றும், மற்றவர்களுக்கு சமமானவர்தான் என்றும் குறிப்பிட்டுள்ளனர். அதில், நீதிபதி கர்ணன் விவகாரம் குறித்தும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.