head


பாஜக திரிணமூல் தொண்டர்கள் மோதல்

|Saturday 13th January 2018|Security| Page Views : 16

மேற்கு வங்கத்தில் உள்ள திரிணமுல் காங்கிரஸ் மேற்கு வங்க பாஜக தலைமையகத்தின்மீது நடத்திய தாக்குதலும் இன்று காலை மற்றொரு இடத்திலும் கலவரம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்தனர் என பொலீஸார் தெரிவித்துள்ளனர்.

இத்தாக்குதல் குறித்து மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறியதாவது: பிஜேபி தலைமையகத்தின்மீது நடந்த இந்தத் தாக்குதலானது சட்டம் மற்றும் ஒழுங்கு காற்றில் பறப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்று காலை 10.30 மணியளவில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் கோஷங்கள் எழுப்பியபடியே பாஜக தலைமை அலுவலகத்தின்மீது கற்கள் எறிந்தனர். இதில் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

எங்களுடைய கட்சி அலுவலகம் மற்றும் வெளியில் நிறுத்தப்பட்டுள்ள கார்கள் மீது கற்கள் வீசப்பட்டன. 10 க்கும் அதிகமான பிஜேபி தொழிலாளர்கள் கடுமையான காயங்களுக்கு ஆளாகியுள்ளனர்,

இதுவா ஜனநாயகம்? சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை முற்றிலும் உடைந்துவிட்டது. ஜனாதிபதியின் ஆட்சி மட்டுமே சட்டத்தின் ஆட்சியை மீண்டும் கொண்டு வர முடியும்" என்று கோஷ் சாடினார்.

மிகப்பெரிய காவல் படை அந்த இடத்திற்கு விரைந்ததாகவும், அதன்பின் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாகவும் போலீஸ்தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும், மாநிலத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்க பா.ஜ.க வன்முறைகளை பயன்படுத்துவதாக திரிணாமூல் காங்கிரஸ் அமைச்சர் ஷாஷி பன்ஜா குற்றம் சாட்டினார். திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களை பா.ஜ.கவினர்தான் தாக்கினர். மாநிலத்தில் நிலவும் அமைதியை பாஜகவினர் குலைப்பதுபோல எங்கள் கட்சி ஒருபோதும் இனவாத சக்தியை மாநிலத்தில் அனுமதிக்காது." என்று அவர் சாடினார். இதற்கு முன்பு ஒரு மணி நேரத்திற்கு முன்னர், கொல்கத்தாவில் உள்ள ஜொரபகன் பகுதியில் உள்ள கட்சிகளின் தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது. நடைபெற்ற சுவாமி விவேகானந்தாவின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மத்திய கொல்கத்தாவில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் பேரணியைக் குறிவைத்து இந்த மோதல் நடத்தப்பட்டது. திருணாமூல் காங்கிரஸ் தலைவர்கள், பாஜக தொண்டர்கள் உள்ளூர் பெண்களிடம் தவறாக நடந்துகொண்டதாகவும் அதன் தலைமைக்கு எதிராக துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டியுள்ளனர்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.