head


சீனாவை எதிர்கொள்ள தயார்!

|Saturday 13th January 2018|Security| Page Views : 21

சீனாவை எதிர்கொள்ள ராணுவம் தயாராக இருப்பதாக ராணுவத் தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார். ராணுவ தினத்தை முன்னிட்டு டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பிபின் ராவத், "இந்திய மண்ணை யாரும் ஆக்கிரமிக்க முடியாது.

சீனா வலிமைமிக்க நாடாக இருக்கலாம் அதேவேளையில் இந்தியா வலுவற்ற நாடு ஒன்றுமில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சீனாவை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். தேசத்தின் வடக்கு எல்லை மீது கவனம் செலுத்த வேண்டிய தருணம் வந்துவிட்டது.

இந்திய எல்லையை ஆக்கிரமிக்க சீனா கடும் பிரயத்தனம் மேற்கொண்டுள்ளது. ஆனால், சீனாவின் முயற்சி தொடர்ந்து முறியடிக்கப்படும். நமது எல்லையை யாராலும் ஆக்கிரமிக்க முடியாது. சீனாவை எதிர்கொள்ளும் திறன் நமக்கு முழுமையாக இருக்கிறது" என்றார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.