head


வடகிழக்கு பருவக்காற்று 15-ம் தேதி விலகலாம்!

|Saturday 13th January 2018|Security| Page Views : 17

தமிழகத்தில் வடகிழக்கு பருவக் காற்று வரும் 15-ம் தேதி விலக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் நிக்கோபார் தீவை ஒட்டியுள்ள பகுதியில் தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நீடித்து வருகிறது.

அதன் காரணமாக அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் வறண்ட வானிலை நிலவும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

தற்போது உள்ள தரவுகளின் அடிப்படையில் பார்க்கும்போது, தமிழகத்தில் வடகிழக்கு பருவக் காற்று வரும் 15-ம் தேதி வாக்கில் விலகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.