head


என்ன நடக்குது ஐயா யாழில்?

|Mon 22nd Jan 2017|| Page Views : 107

வடக்குமண் வலிகளால் சூழப்பட்ட ஒரு மண்ணாய் போயிற்று போருக்கு பின்னரான வடுக்கள் மறைவதற்கு முன் தொடரும் அகால மரணங்கள் வடுக்களின் நீளத்தை அதிகரித்து செல்கிறது.

தமிழ் கலாசாரத்திற்கு பெயர்போன வடக்குமண் இன்று திறந்துவிடப்பட்டடுள்ள கட்டற்ற சுகந்திரத்தால் சீரழிந்து போவதை எமது கண் முன்னே காணமுடிகிறது.

சமீபத்தில் இடம்பெற்ற யாழ் வண்ணார்பண்ணை கொலை சம்பவமும் இவ்வாறான சமூக சீர்கேட்டையே நினைவூட்டுகிறது.தனது குடும்பத்தினரையே கொல்லத்தூண்டும் அளவிற்கு இவை மோசமடைந்துள்ளன. யாழ் வண்ணார்பண்ணை கொலைச்சம்பவம் ஒரு நாளிலேயே அனைவரையூம் அதிர்ச்சியூடன் திரும்பி பார்க்கவைத்த சம்பவமாகும்.

இந்த கொலையின் பின்னணிதான் என்ன?

நகை பட்டறை ஒன்றில் பணிபுரியூம் 33 வயதுடைய ஈஸ்வரன் குறித்த சம்பவத்தினத்தன்று போதையின் தனது வீட்டு சென்றுள்ளார்.அங்கு அவர் தனது தாயூடன் வாக்குவாதம் ஏற்பட்டதுடன் மதுபானம் அருந்த பணம் கேட்டு வாய்தகராரில் ஈடுபட்டுள்ளனர். தர்க்கம் கைகலப்பாக மாறவே வீட்டில் இருந்த கைக்கோடாரியால் தனது தாயை தாக்கியூள்ளனர்."ஈன்ற தாயை கொல்லும் துணிச்சலை தரக்கூடியதா போதை" தொடர்ந்து சம்பவத்தை நேரில் பார்த்துக்கொண்டிருந்த தம்பியின் மகளான 3வயது சிறுமியையூம் கோடரியால் தாக்கியூள்ளனர்.சிறுமி குறித்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இத்தாக்குதலின் பின் கொலையாளியூம் நஞ்சு அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.தற்போது அவரின் தயார் யாழ் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக நடைபெற்ற முதற்கட்ட விசாரணையிலிருந்து தெரியவருகிறது.கொலையாளியான ஈஸ்வரன் மது அருந்திவிட்டு அடிக்கடி தாயாருடன் தகராரில் ஈடுபட்டதாகவூம் குறித்த நபர் மனநோயால் பாதிக்கப்பட்டவர் எனவூம் தெரிவிக்கப்பட்டுள்ளார். இவ்வாறான சூழ்நிலையிலேயே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாக யாழ் பொலிசார் தெரிவிக்கின்றார். "குடி குடியை கெடுக்கும்" என்பார்கள்.இன்று இங்கு இவரின் விடயத்தில் உண்மையாகி இவரின் உயிரையூம் காவூ வாங்கிவிட்டன.

வடக்கை பொறுத்தவரையில் சமிபகாலமாக இவ்வாறான குடும்பத்தகராறு, வாள்வெட்டு, வன்புணர்வூ, கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம் பெற்று வருவதை அவதானிக்க முடிகிறது.

இவ்வாறான தொடர் சம்பவங்களுக்கான காரணம் தான் என்ன?

01.யாழில் சட்டவிரோதமாக அதிகரித்து வரும் மதுபானசாலைகள்

02.போதைப்பொருட்கள் பாவனைகள்

03.வேலையின்மை

04.யாழ் இளைஞ்சர்கள் மத்தியில் இருக்கின்ற பொறுப்பற்ற வாழ்க்கை முறை

05.விபச்சார விடுதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

06.போரினால் பாதிக்கப்பட்டு அங்கவீனமானவர்களுக்கு வாழ்வாதார செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை.

மேற்படி காரணங்களை வைத்து ஆராயூம் போது ! மனிதன் மனிதனாக வாழ்வதற்கு ஏதுவான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்திக்கொள்ளுதல் சமூகத்தில் ஒவ்வொருவரினதும் ஒரு முக்கிய கடமையாகும். இன்னொரு விடயத்தை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.ஊடக தர்மம் என்பது.தவறை சுட்டிக்காட்டுவதாகும் இன்னொரு தவறை செய்வதற்கு தூண்டுவது அல்ல மேலும் ஊடகம் மக்களுக்கு தவறான செய்திகளை கொண்டு சேர்க்கும் ஒன்றாக அமைந்துவிட கூடாது. "இலைமறை காய்போல்" சிலவற்றை தவிர்த்துக்கொள்ளுதல் நல்லது.அதேபோன்று சமூகவலைத்தளங்களும் சமூகத்தின் மீது அக்கறை செலுத்த வேண்டுமே தவிர தவறான விடயங்களுக்கு துண்டு கோளாக அமைந்துவிட கூடாது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.