head

தீர்ந்துபோனதா ஒக்கியின் பெருந்துயர்?

- என்.சுவாமிநாதன்

|Thu 08th Feb 2018 09.10AM|General| Page Views : 60

ஒக்கி புயல் தொடர்பான செய்திகள் நினைவிருக்கின்றனவா? நாளிதழ்களிலும், செய்தித் தொலைக்காட்சிகளிலும், ஏன், அரசியல் தலைவர்களின் பேச்சு, அறிக்கைகளிலும்கூட சமகாலத்தில் அதிகம் இடம்பிடித்த வார்த்தை ஒக்கி... பெருந்துயரின் மூன்றெழுத்து அது! கடந்த நவம்பர் 30-ல் குமரியைத் தாக்கிய ஒக்கி புயலின் கோரதாண்டவத்துக்குப் பின்னர், பிரதமர் நரேந்திர மோடி முதல் லெட்டர்பேட் கட்சித் தலைவர்கள் வரை கடைக்கோடி கன்னியாகுமரியில் முகாமிட்டனர். ஒக்கி புயலில் தங்கள் உறவினர்களை இழந்து கதறிய மீனவக் குடும்பங்கள், அவர்கள் திரும்பி வருவார்களா என்று கண்ணீருடன் கரையில் காத்திருந்த பெண்களின் துயரம் பற்றி எல்லோரும் பேசினோம். இதோ, முழுதாக மூன்று மாதங்கள்கூட ஆகவில்லை. குமரி யைக் கடந்து ஒக்கியின் குரலை இப்போது எங்குமே கேட்க முடியவில்லையே ஏன்? குமரியின் துயர் தீர்ந்துவிட்டதா?

இன்னமும்கூட 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரை திரும்ப வேண்டியுள்ளது. விவசாயிகளுக்கு நிவாரணம் போதுமானதாக இல்லை. சாகுபடிக்கு வழியின்றிப் பல இடங்களிலும் மறுநடவுகூடச் செய்யப்படவில்லை. குமரி மேற்கு மாவட்டத்தின் சாலைகளில் பயணித்தால் தெரியும்.. சாலையோரங்களில், வீட்டு முற்றத்தில் விழுந்துகிடந்து அறுக்கப்பட்டு, அகற்றப்படாத மரங்கள் பலவும் இன்னமும்கூட மெளன சாட்சியாய்க் கிடக்கின்றன. இதன் காரணமாக, மேற்கு மாவட்டத்தின் குக்கிராமங்கள்கூட இப்போது போக்குவரத்து நெருக்கடிக்குத் தப்பவில்லை. குறுக்கும் நெடுக்குமாக மினி டெம்போக்கள் பயணித்துக்கொண்டிருக்கின்றன. முறிந்து விழுந்த ரப்பர் மரங்கள் வெட்டி எடுக்கப்பட்டு தீப்பெட்டி, ஃபிளை வுட் தொழிற்சாலைகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. ஆனால், வாழ்வாதாரம் இழந்த பல ஆயிரம் குடும்பங்களின் துயரம் தீரவேயில்லை.

முடிவுக்கு வராத துன்பம்

இத்தனைக்குப் பின்பும் நம் நினைவுகளிலிருந்து ஒக்கி புயலின் பாதிப்புகள் விலகிச் சென்றுவிட்டனவே, எப்படி? அடுத்தடுத்து வந்த தொடர் சர்ச்சைகளில் கவனம் பதிந்ததே ஏன்? வைரமுத்து விவகாரம். தமிழ்த்தாய் வாழ்த்துக்கு விஜயேந்திரர் எழுந்து நிற்காத விவகாரம். நாளுக்கு நாள், மணிக்கொரு முறை வெவ்வேறு பிரச்சினைகள். அவை தொடர்பான சர்ச்சைகள். இப்படித்தான் பல்வேறு கவனச் சிதறல்களால் நாம் ஒவ்வொரு பெரு வலியையும் கடந்துவிடுகிறோம். நிரந்தர இழப்பினைச் சுமந்து நிற்கிறது மீனவர் சமூகம். நிகழ்கால வருவாய் இழப்பால் தவித்துநிற்கின்றன விவசாயிகளின் குடும்பங்கள்.

நவம்பர் 30-ம் தேதி, குமரி மாவட்டத்தில் ஒக்கி புயல் கோரதாண்டவமாடிற்று. ஆயிரக்கணக்கில் மின் கம்பங்களும், பல ஆயிரக்கணக்கில் ரப்பர், வாழை மரங்களும் முறிந்து விழுந்தன. ஆங்காங்கே வீடுகளின் முன் பகுதி யில் நின்ற மரங்கள் முறிந்து விழுந்து, முதல் நாளன்று 4 பேர் பலியாகியிருப்பதாக தகவல் வந்தது. ஊடகவியலாளர்கள் சுற்றிச் சுழன்று செய்திகளைச் சேகரித்தபோது, மாவட்டம் முழுவதும் மின்சாரம் இல்லை. மின்னஞ்சல் வசதி கிடைக்காமல் செய்தியை அலுவலகத்துக்குக் கொண்டுசேர்க்கப் பட்டபாடு கண்முன்னே வந்துபோகிறது. பெட்ரோல் நிலையங்கள், ஜெனரேட்டர் கொண்டு இயங்கிய கடைகள், ஏன் காவல் நிலையங்களில் இருந்துகூட ஒக்கி புயல் தொடர்பான செய்திகளைப் பதிவுசெய்தோம்.

மீண்டுவராத மீனவர்கள்

உண்மையில், இந்தப் புயலில் மீனவர்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாகியிருக்கும் விஷயம், அந்தச் சமயத்தில் யாருக்கும் தெரியவில்லை. இரண்டு நாட்களுக்குப் பிறகுதான், கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற நூற்றுக்கணக்கான மீனவர்கள் திரும்பி வராதது பற்றிய தகவல்கள் வெளிவரத் தொடங்கின. ஒட்டுமொத்தத் தமிழகமும் அதன் பின்னர்தான் இந்தப் புயலின் வீரியத்தை உணர்ந்தது. அதன் பின்பும் அரசு விழித்துக்கொள்ளாததுதான் மிகப் பெரிய வேதனை. ?கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை 44 மீனவக் கிராமங்கள் உள்ளன. இதில் இரயுமண்துறை, நீரோடி, பூத்துறை, சின்னத்துறை, இரவிபுத்தன்துறை, வல்லவிளை, மார்த்தாண்டம் துறை ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய தூத்தூர் மண்டலத்தில் 144 மீனவர்கள் காணாமல்போனார்கள். இதுவரை 14 பேரின் உடல்கள் கிடைத்திருக்கின்றன. இதேபோல் குளச்சல் மண்டலத்தில் 8 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். இன்னும் 18 பேர் கரை திரும்பவில்லை. குமரி மாவட்டத்தில் இன்னும் 122 மீனவர்கள் இன்று வரை கரை திரும்பவில்லை? என்கிறார் சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளைத் தலைவர் ஜஸ்டின் ஆன்றனி.

இவர்கள் எல்லாம் வழக்கம்போல் கடலுக்குச் சென்றவர்கள்தானே? அப்பா வந்து கிறிஸ்துமஸ் கொண்டாடு வோம் எனக் காத்திருந்த குழந்தைகளின் புத்தாண்டும், பொங்கலும் தாண்டிவிட்ட நிலையில், மனம் எத்தனை ரணப்பட்டிருக்கும்? இன்றைக்கு எத்தனை பேருக்கு மீனவர்களின் துயரம் நினைவிலிருக்கிறது?

?அரசு நிவாரணம் அறிவித்ததே தவிர, அது இதுவரை முழுமையாகச் சென்று சேரவில்லை. 100 நாட்டிக்கல் மைலுக்கு மேல் மீன் பிடிப்பவர்களுக்குத் தகவல் சொல்ல எங்களிடம் தகவல் தொழில்நுட்ப வசதிகள் இல்லை என்று முதல்வரே பேசினார். ஒக்கி புயலுக்குப் பின்னரும் அப்படியான முயற்சிகளில் அரசு ஈடுபடவில்லை. மாயமான மீனவர்களை இறந்தவர்கள் என அறிவிப்பதிலும் வேகமான முன்னெடுப்புகள் இல்லை? என்கிறார் பத்மநாபபுரம் தொகுதியின் எம்.எல்.ஏ. மனோதங்கராஜ்.

?ஒக்கிக்குப் பிறகாவது, பயிர்க் காப்பீட்டுத் திட்டம் முறைப்படுத்தப்பட்டு உள்ளதா? ரப்பர், வாழை, தென்னை, தோட்டக் கலைப் பயிர்கள் முறிந்து விழுந்ததில் வாழ்வாதாரம் இழந்து நிற்கும் விவசாயிகளுக்கு எத்தனை வங்கிகள் கடன் கொடுத்துத் தூக்கிவிட்டிருக்கின்றன? அரசிடம் இது குறித்துப் புள்ளிவிவரங் கள் இருக்கின்றனவா? குமரியில் லட்சக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்ததன் விளைவாக வெப்பநிலை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால், அரசு எத்தனை மரங்களைப் புதிதாக நட்டுள்ளது?? என்று ஆதங்கத்துடன் கேட்கிறார் மனோதங்கராஜ்.

வேளாண் பாதிப்புகள்

ரப்பர் பயிரை எடுத்துக்கொள்வோம். ஒரு ஹெக்டேருக்கு ரப்பருக்கு அரசு ரூ.18 ஆயிரம் கொடுக்கிறது. ஒரு ஹெக்டேரில் 500 முதல் 550 மரங்கள் வரை இருக்கும். இதை வைத்துக் கணக்கிட்டுப் பார்த்தால், ரப்பர் மீண்டும் பால் வடிப்புக்கு வர ஏழு ஆண்டுகளாவது ஆகும். அதுவரை விவசாயியின் வாழ்க்கை என்னாவது

பேச்சிப்பாறையின் மறுகரையில் வாழும் காணி பழங்குடிகளின் வாழ்வாதாரமும் சிதைந்துவிட்டது. அவர்களின் தோட்டக்கலைப் பயிர்களும், குடியிருப்புகளும் பலத்த சேதம் அடைந்து, இப்போதுதான் சீர்செய்துள்ளனர். காணி மக்களின் வளர்ச்சி ஒரு தலைமுறை பின்னுக்கு நகர்ந்துள்ளது. ?உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கப்பட்டுவருகிறது; மாயமானவர்களை, இறந்தவர்களாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது; விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுவருகிறது? என்று பட்டியலிடுகிறது அரசுத் தரப்பு. ஆனால், நிரந்தரத் தீர்வுக்கு அரசு என்ன செய்திருக்கிறது என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை. இன்னொரு புயல் வந்தால் ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்கும் மீனவர் களுக்குத் தகவல் சொல்ல, தகுந்த ஏற்பாடுகள் இன்றுவரை செய்யப்படவில்லை. ?கடைசி மீனவன் கிடைக்கும் வரை தேடுதல் வேட்டை தொடரும்? என்று தமிழக அரசு சொன்னதை நம்பித்தான், போராட்டத்தைக் கைவிட்டார்கள் மீனவர்கள். இப்போது எங்கே, எத்தனை பேர் தேடிக் கொண்டிருக் கிறார்கள் என்னும் தரவுகள் இருக்கின்றனவா அரசிடம்? மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடக்கின்றனவா என்பதைப் பற்றி யாருக்கு அக்கறை? நம் சமகால அரசியல் வரவுகளான ரஜினிக்கும் கமலுக்கும் எதிர்காலம் எப்படி இருக்கும் எனும் விவாதத்தை நாம் தொடர்வோம். அதுதானே நமக்கு முக்கியம்!

தொடர்பான செய்திகள் நினைவிருக்கின்றனவா? நாளிதழ்களிலும், செய்தித் தொலைக்காட்சிகளிலும், ஏன், அரசியல் தலைவர்களின் பேச்சு, அறிக்கைகளிலும்கூட சமகாலத்தில் அதிகம் இடம்பிடித்த வார்த்தை ஒக்கி... பெருந்துயரின் மூன்றெழுத்து அது! கடந்த நவம்பர் 30-ல் குமரியைத் தாக்கிய ஒக்கி புயலின் கோரதாண்டவத்துக்குப் பின்னர், பிரதமர் நரேந்திர மோடி முதல் லெட்டர்பேட் கட்சித் தலைவர்கள் வரை கடைக்கோடி கன்னியாகுமரியில் முகாமிட்டனர். ஒக்கி புயலில் தங்கள் உறவினர்களை இழந்து கதறிய மீனவக் குடும்பங்கள், அவர்கள் திரும்பி வருவார்களா என்று கண்ணீருடன் கரையில் காத்திருந்த பெண்களின் துயரம் பற்றி எல்லோரும் பேசினோம். இதோ, முழுதாக மூன்று மாதங்கள்கூட ஆகவில்லை. குமரி யைக் கடந்து ஒக்கியின் குரலை இப்போது எங்குமே கேட்க முடியவில்லையே ஏன்? குமரியின் துயர் தீர்ந்துவிட்டதா?

இன்னமும்கூட 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரை திரும்ப வேண்டியுள்ளது. விவசாயிகளுக்கு நிவாரணம் போதுமானதாக இல்லை. சாகுபடிக்கு வழியின்றிப் பல இடங்களிலும் மறுநடவுகூடச் செய்யப்படவில்லை. குமரி மேற்கு மாவட்டத்தின் சாலைகளில் பயணித்தால் தெரியும்.. சாலையோரங்களில், வீட்டு முற்றத்தில் விழுந்துகிடந்து அறுக்கப்பட்டு, அகற்றப்படாத மரங்கள் பலவும் இன்னமும்கூட மெளன சாட்சியாய்க் கிடக்கின்றன. இதன் காரணமாக, மேற்கு மாவட்டத்தின் குக்கிராமங்கள்கூட இப்போது போக்குவரத்து நெருக்கடிக்குத் தப்பவில்லை. குறுக்கும் நெடுக்குமாக மினி டெம்போக்கள் பயணித்துக்கொண்டிருக்கின்றன. முறிந்து விழுந்த ரப்பர் மரங்கள் வெட்டி எடுக்கப்பட்டு தீப்பெட்டி, ஃபிளை வுட் தொழிற்சாலைகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. ஆனால், வாழ்வாதாரம் இழந்த பல ஆயிரம் குடும்பங்களின் துயரம் தீரவேயில்லை.

முடிவுக்கு வராத துன்பம்

இத்தனைக்குப் பின்பும் நம் நினைவுகளிலிருந்து ஒக்கி புயலின் பாதிப்புகள் விலகிச் சென்றுவிட்டனவே, எப்படி? அடுத்தடுத்து வந்த தொடர் சர்ச்சைகளில் கவனம் பதிந்ததே ஏன்? வைரமுத்து விவகாரம். தமிழ்த்தாய் வாழ்த்துக்கு விஜயேந்திரர் எழுந்து நிற்காத விவகாரம். நாளுக்கு நாள், மணிக்கொரு முறை வெவ்வேறு பிரச்சினைகள். அவை தொடர்பான சர்ச்சைகள். இப்படித்தான் பல்வேறு கவனச் சிதறல்களால் நாம் ஒவ்வொரு பெரு வலியையும் கடந்துவிடுகிறோம். நிரந்தர இழப்பினைச் சுமந்து நிற்கிறது மீனவர் சமூகம். நிகழ்கால வருவாய் இழப்பால் தவித்துநிற்கின்றன விவசாயிகளின் குடும்பங்கள்.

நவம்பர் 30-ம் தேதி, குமரி மாவட்டத்தில் ஒக்கி புயல் கோரதாண்டவமாடிற்று. ஆயிரக்கணக்கில் மின் கம்பங்களும், பல ஆயிரக்கணக்கில் ரப்பர், வாழை மரங்களும் முறிந்து விழுந்தன. ஆங்காங்கே வீடுகளின் முன் பகுதி யில் நின்ற மரங்கள் முறிந்து விழுந்து, முதல் நாளன்று 4 பேர் பலியாகியிருப்பதாக தகவல் வந்தது. ஊடகவியலாளர்கள் சுற்றிச் சுழன்று செய்திகளைச் சேகரித்தபோது, மாவட்டம் முழுவதும் மின்சாரம் இல்லை. மின்னஞ்சல் வசதி கிடைக்காமல் செய்தியை அலுவலகத்துக்குக் கொண்டுசேர்க்கப் பட்டபாடு கண்முன்னே வந்துபோகிறது. பெட்ரோல் நிலையங்கள், ஜெனரேட்டர் கொண்டு இயங்கிய கடைகள், ஏன் காவல் நிலையங்களில் இருந்துகூட ஒக்கி புயல் தொடர்பான செய்திகளைப் பதிவுசெய்தோம்.

மீண்டுவராத மீனவர்கள்

உண்மையில், இந்தப் புயலில் மீனவர்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாகியிருக்கும் விஷயம், அந்தச் சமயத்தில் யாருக்கும் தெரியவில்லை. இரண்டு நாட்களுக்குப் பிறகுதான், கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற நூற்றுக்கணக்கான மீனவர்கள் திரும்பி வராதது பற்றிய தகவல்கள் வெளிவரத் தொடங்கின.

ஒட்டுமொத்தத் தமிழகமும் அதன் பின்னர்தான் இந்தப் புயலின் வீரியத்தை உணர்ந்தது. அதன் பின்பும் அரசு விழித்துக்கொள்ளாததுதான் மிகப் பெரிய வேதனை. ?கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை 44 மீனவக் கிராமங்கள் உள்ளன. இதில் இரயுமண்துறை, நீரோடி, பூத்துறை, சின்னத்துறை, இரவிபுத்தன்துறை, வல்லவிளை, மார்த்தாண்டம் துறை ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய தூத்தூர் மண்டலத்தில் 144 மீனவர்கள் காணாமல்போனார்கள். இதுவரை 14 பேரின் உடல்கள் கிடைத்திருக்கின்றன. இதேபோல் குளச்சல் மண்டலத்தில் 8 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். இன்னும் 18 பேர் கரை திரும்பவில்லை. குமரி மாவட்டத்தில் இன்னும் 122 மீனவர்கள் இன்று வரை கரை திரும்பவில்லை? என்கிறார் சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளைத் தலைவர் ஜஸ்டின் ஆன்றனி.

இவர்கள் எல்லாம் வழக்கம்போல் கடலுக்குச் சென்றவர்கள்தானே? அப்பா வந்து கிறிஸ்துமஸ் கொண்டாடு வோம் எனக் காத்திருந்த குழந்தைகளின் புத்தாண்டும், பொங்கலும் தாண்டிவிட்ட நிலையில், மனம் எத்தனை ரணப்பட்டிருக்கும்? இன்றைக்கு எத்தனை பேருக்கு மீனவர்களின் துயரம் நினைவிலிருக்கிறது

?அரசு நிவாரணம் அறிவித்ததே தவிர, அது இதுவரை முழுமையாகச் சென்று சேரவில்லை. 100 நாட்டிக்கல் மைலுக்கு மேல் மீன் பிடிப்பவர்களுக்குத் தகவல் சொல்ல எங்களிடம் தகவல் தொழில்நுட்ப வசதிகள் இல்லை என்று முதல்வரே பேசினார். ஒக்கி புயலுக்குப் பின்னரும் அப்படியான முயற்சிகளில் அரசு ஈடுபடவில்லை. மாயமான மீனவர்களை இறந்தவர்கள் என அறிவிப்பதிலும் வேகமான முன்னெடுப்புகள் இல்லை? என்கிறார் பத்மநாபபுரம் தொகுதியின் எம்.எல்.ஏ. மனோதங்கராஜ்.

?ஒக்கிக்குப் பிறகாவது, பயிர்க் காப்பீட்டுத் திட்டம் முறைப்படுத்தப்பட்டு உள்ளதா? ரப்பர், வாழை, தென்னை, தோட்டக் கலைப் பயிர்கள் முறிந்து விழுந்ததில் வாழ்வாதாரம் இழந்து நிற்கும் விவசாயிகளுக்கு எத்தனை வங்கிகள் கடன் கொடுத்துத் தூக்கிவிட்டிருக்கின்றன? அரசிடம் இது குறித்துப் புள்ளிவிவரங் கள் இருக்கின்றனவா? குமரியில் லட்சக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்ததன் விளைவாக வெப்பநிலை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால், அரசு எத்தனை மரங்களைப் புதிதாக நட்டுள்ளது?? என்று ஆதங்கத்துடன் கேட்கிறார் மனோதங்கராஜ்.

வேளாண் பாதிப்புகள்

ரப்பர் பயிரை எடுத்துக்கொள்வோம். ஒரு ஹெக்டேருக்கு ரப்பருக்கு அரசு ரூ.18 ஆயிரம் கொடுக்கிறது. ஒரு ஹெக்டேரில் 500 முதல் 550 மரங்கள் வரை இருக்கும். இதை வைத்துக் கணக்கிட்டுப் பார்த்தால், ரப்பர் மீண்டும் பால் வடிப்புக்கு வர ஏழு ஆண்டுகளாவது ஆகும். அதுவரை விவசாயியின் வாழ்க்கை என்னாவது? பேச்சிப்பாறையின் மறுகரையில் வாழும் காணி பழங்குடிகளின் வாழ்வாதாரமும் சிதைந்துவிட்டது. அவர்களின் தோட்டக்கலைப் பயிர்களும், குடியிருப்புகளும் பலத்த சேதம் அடைந்து, இப்போதுதான் சீர்செய்துள்ளனர். காணி மக்களின் வளர்ச்சி ஒரு தலைமுறை பின்னுக்கு நகர்ந்துள்ளது. ?உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கப்பட்டுவருகிறது; மாயமானவர்களை, இறந்தவர்களாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுவருகிறது? என்று பட்டியலிடுகிறது அரசுத் தரப்பு. ஆனால், நிரந்தரத் தீர்வுக்கு அரசு என்ன செய்திருக்கிறது என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை. இன்னொரு புயல் வந்தால் ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்கும் மீனவர் களுக்குத் தகவல் சொல்ல, தகுந்த ஏற்பாடுகள் இன்றுவரை செய்யப்படவில்லை. ?கடைசி மீனவன் கிடைக்கும் வரை தேடுதல் வேட்டை தொடரும்? என்று தமிழக அரசு சொன்னதை நம்பித்தான், போராட்டத்தைக் கைவிட்டார்கள் மீனவர்கள். இப்போது எங்கே, எத்தனை பேர் தேடிக் கொண்டிருக் கிறார்கள் என்னும் தரவுகள் இருக்கின்றனவா அரசிடம்? மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடக்கின்றனவா என்பதைப் பற்றி யாருக்கு அக்கறை? நம் சமகால அரசியல் வரவுகளான ரஜினிக்கும் கமலுக்கும் எதிர்காலம் எப்படி இருக்கும் எனும் விவாதத்தை நாம் தொடர்வோம். அதுதானே நமக்கு முக்கியம்!
www
  www.elukathir.lk
 
Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.