head


இலங்கை உள்நாட்டுத் தேர்தல் பற்றிச் சில வரிகள் வாக்குரிமை-ஜனநாயகத்தின் அதிபெரு சக்தி

- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்


|Thu 08th Feb 2018 09.50AM|General| Page Views : 58

இன்று உலகிலுள்ளு பெரும்பாலான நாடுகள் ஜனநாயக முறையில் தங்களை ஆட்சி செய்யும் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கின்றன.

மன்னராட்சியோ,ஒரு குறிப்பிட்ட கொள்கை மட்டும் உள்ளவர்களின் சர்வாதிகார ஆட்சியோ இன்று மறைந்து விட்டது. மக்கள் தங்கள் வாழ்க்கை வளத்தை பல்வழிகளிலும் மேம்படுத்தும் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பது ஒரு புதிய தலைமுறையை வளர்த்தெடுப்பதற்குத் தேவையான முக்கிய விடயங்களாகும்.

இலங்கையில் நடந்த போராட்டத்தால் பாரம்பரிய பொருளாதார வாழ்வாதாரங்கள் சிதைக்கப் பட்டு விட்டன. அதன் பின் மக்களால் தேர்ந்தெடுக்கப்ட்ட அரசியல் வாதிகள் பொது மக்களின் வாழ்க்கை வளத்திற்கு எவ்வளவு நன்மை செய்திருக்கிறார்கள் என்று இலங்கையில்- முக்கியமாக கடந்த காலங்களில் மிகத் துயர் பட்ட தமிழ் மக்கள் ஒவ்வொரும் கேட்கவேண்டிய கால கட்டமிது.

ஒரு ஜனநாயக நாட்டில் மக்களின் தேவைகளான,கல்வி,பொருளாதாரம், பாதுகாப்பு,பொதுச் சுகாதாரம்,பிரயாணவசதிகள்,கலை கலாச்சாரப் பரிமாணங்களின் வளர்ச்சிகள் என்பன போன்ற பல்விதமான மக்கள் தேவைகள் பற்றிப் பொது மக்களின் விருப்பு வெறுப்புக்கள் தேர்தல்கள் மூலம் நிர்ணயிக்கப் படுகின்றன.

ஓரு தொகுதியைச் சேர்ந்த மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய'என்னால் முடியும்' என்று தன்னை ஒருத்தர் அறிமுகம் செய்யும்போது அவரை அவர்கள் நம்புகிறார்களா இல்லையா என்பது மக்கள் அவருக்குத் தரும் வாக்குகளிற் தங்கியிருக்கிறது.

ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் வாக்குரிமை 1931ம் ஆண்டு கிடைத்தது.

அதற்கு முன்,இலங்கை மக்களின் பிரதி நிதிகளாகப் 'படித்தவர்களும்,பணக்காரர்களும்' பிரித்தானிய காலனித்துவ அரசால் நியமிக்கப் பட்டார்கள். அந்த கால கட்டத்தில்,படித்த, மேல்சாதியைச் சேர்ந்த யாழ்ப்பாணத்தார் மட்டுமே இலங்கையைப் பிரதி நிதித்துவம் செய்தார்கள். அவர்களின் சேவை அவர்களின் வர்க்கம் சார்ந்தவர்களின் நன்மையைக் கருத்திற் கொண்டிருந்தது.

பிரித்தானியாவில் தங்கள் வாக்குரிமைக்காகப் போராடிய பெண்கள் செய்த போராட்டத்தால் 1928ல் பிரித்தானியாவலும் பிரித்தானிய காலனித்துவ நாடுகளிலும் ' ஒட்டுமொத்த' மக்களுக்கும் வாக்குரிமை கிடைத்தது.

ஆனால், இலங்கை சுதந்திரம் கிடைத்தபின், நடந்த அரசியல் மாற்றங்களால் இந்திய தமிழ்த்தோட்டத் தொழிலாளர்களின் இலங்கை பிரஜா உரிமைக்கு,சிங்கள் தலைவர்களால் கொண்டு வரப்பட்ட புதிய சட்டத்திற்குத் தமிழ்த்தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலம் போன்றோர் வாக்களித்தால் இலங்கைத் தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் வாக்குரிமையை இழந்தார்கள்.ஜி.ஜ.பொன்னம்பலத்திற்குத் தமிழ்த் தோட்டத் தொழிலாளர்கள்' தமிழர்களாகத் தெரியவில்லை. திரு.செல்வநாயகம் அவர்கள் அந்த சட்டத்தை எதிர்த்தார்.இதனால் பாராளுமன்றத்தில் 'தமிழர்'களின் நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டன.

அன்றிலிருந்து இன்று வரை,தமிழர்களின் வாழ்வாதாரத் தேவைகள்,'தமிழ்த்' தலைவர்களின் 'யாழ் மையவாத சிந்தனையை' ஒட்டியே நகர்ந்து கொண்டிருக்கினறன. அக்காலத்தில் ஒட்டுமொத்த இலங்கை மக்களையும் லண்டன் காலனித்துவ ஆளுமைக்குப் பிரதிநிதிப் படுத்திய' யாழ்ப்பாணத் தலைமை' சிங்களவர்களை விடத் தாங்கள் மேலானவர்கள் என்ற சிந்தனையை பிரதிபலித்தார்கள். அதனால்,நூறு வருடங்களுக்கு முன் 1918ம் ஆண்டு, அன்று இலங்கை மக்களின் மொத்த சனத் தொகையில் 4 விகிதமாக இருந்த தமிழ் மக்களுக்கு 50-50 அதிகாரப் பகிர்வுக்கான கோட்பாட்டைத் தமிழத் தலைவர்கள் முன்வைத்தார்கள். அன்று அந்தத் திட்டத்தை பிரித்தானிய அரசோ, இலங்கையின் சிங்களத் தலைவர்களோ ஏற்றுக் கொள்ளவில்லை.

அவர்களின் சிந்தனை,தமிழர்களை 'ஒட்டு மொத்த' இலங்கைப் பிரஜையாகப் பார்க்காமல் தனிப் பட்ட இனமாகப் பார்த்த பிரிவினைச் சித்தாந்தங்களால் தமிழர்களின் வாழ்வைச் சீரழித்துக் கொண்டு வருகிறது.

தொடர்ந்த முரண்பாடுகளால் வந்த முப்பது வருட யுத்தமும் தோல்வியும்,ஆயிரக் கணக்கான தமிழ் உயிர்களின் அழிவும்.பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் புலம் பெயர்வும், போரினாற் பாதிக்கப் பட்ட பல்லாயிரக்காண விதவைகளினதும் அனாதைக் குழந்தைகளினதும் கண்ணீரும் அவலமும் தமிழ்த் தலைமையி; சிந்தனையை மாற்ற வில்லை. அவர்கள் போரின் தோல்விக்குப் பின்னும்,தங்கள் சமூகத்தின் மேம்பாட்டுக்கு ஆவன செய்ய வேண்டும் என்ற தார்மீகக் கடமை நிலைப் பாட்டை அவர்கள் ஒருநாளும் மனதார முன்னெடுக்கவில்லை.

அதற்கு மாறாகத் தங்களினதும்,தங்களின் வர்க்கம் சார்ந்தவர்களினதும் நன்மைக்காக மட்டும் அவர்கள் சிறு அசைவுகளைச் செய்கிறார்கள். இலங்கையில் மக்கள் தொகையில் தமிழர்களின் நிலை நாளுக்கு நாள் பலவீனமாகிக் கொண்டவருகிறது. தாங்கள் பிறந்த நாட்டில் தங்களுக்குத் தேவையான முன்னேற்றமான வாழ்க்கை வழிமுறைகளில்லாததால் இளம் தலைமுறையினர் வெளிநாடுகளைக் குறிவைத்து வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.

மிகவும்,கடினமான உழைப்புணர்வு கொண்ட தமிழ்ச்சமூகத்தின் தேவைகள் தமிழ்த் தலைவர்களால் எழுபது வருடங்களாக திசை திருப்பப் பட்டுப் பல சிPழிவுகளைச் சந்தித்ததை இன்றைய இளம் தமிழ்த் தலைமுறை மிகவும் கவனமாக ஆய்வு செய்யவேண்டும்.

பிரித்தானிய காலனித்துவத்திலிருந்த சுதந்திரம் வெற்ற பல நாடுகள் இன்று பலவழிகளிலும் முன்னேறிக் கொண்டிருக்கின்றன. தங்களிடமிருந்து சுதந்திரத்திற்காகப் போரடிய இந்தியாவை, பிரித்தானிய ஆணவமிக்க தலைவரான வின்ஸ்டன் சேர்ச்சில் போன்றவர்கள் இரண்டாகப் பிரித்தார்கள்.

பிரித்தானியா இந்தியாவிலிருந்து வெளியேறியதும், பிரிந்துபோய் இருநாடுகளாகத் துண்டுபட்ட இந்தியாவும் பாகிஸ்தானும் அடிபட்டுக் கொள்ளும் நிலை வரும்போது,அல்லது, சாதி மத, இனப் பிரச்சினைகளால் இந்தியாவிற் பிரச்சினை வந்து ஒருத்தருடன் ஒருத்தர் அடிபட்டுக் கொள்ளும்போது,அவர்களைச் சமாதானப் படுத்தும் 'ஆபத்பாந்தவனாகப'; பிரித்தானிய இன்னுமொருதரம் இந்தியாவைக் கபளிகரம் செய்யத் திட்டமிட்டமிருந்திருக்கலாம்.

ஆனால் நாட்டுப் பற்றுக் கொண்ட தலைவர்களான நேரு,போன்றவர்கள் இந்திய மக்களின் தேவைகைளை யாரிடமும் கேட்காமல் இந்திய மக்களே முன்னெடுக்கப் பல திட்டங்களைக் கொண்டுவர எண்ணினார். 'எல்லோரும் ஓரினம் எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் இந்தியமக்கள்' என்ற தார்மீகத்தில் மிகவும் நம்பிக்கை கொண்ட நேரு அவர்கள், இந்தியாவில் அன்றிருந்த மிகத் திறமைசாலிகளில் ஒருத்தரான -தாழ்த்தப் பட்டமனிதனான டாக்டர் அம்பேத்கார் என்பரின் தலைமையில் இந்திய நிர்வாகக் கோட்பாட்டை எழுதி இந்திய மக்கள் அத்தனைபேரம் சமத்துவம் என்று காட்டினார்.

ஆனால் இலங்கையிலோ தமிழ், சிங்களத் தலைவர்கள் தங்கள் .'அரசியல் ஆளுமை இருத்தலை' நிலை படுத்த இனவாத்தை முன்னேடுத்தார்கள். பல இனக் கலவரங்களில் பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் கொல்லப் பட்டார்கள். படித்த சமூகமாக வலம் வந்த 'தமிழினம்'இன்று தமிழ்த்தலைவர்கள் செய்த அரசியல் ஞானமற்ற செயற்பாடுகளால் அரைகுறைப் பட்டிச் சமுகமாக மாறி மற்றவர்களிடம் கையேந்தும் நிலை வந்திருக்கிறது.

சிங்களத் தலைவர்களின் 'நீண்ட பார்வையற்ற' அரசியற் கண்ணோட்டத்தால் அவர்களின் தன்னலமான ஆளுமைக்கு எதிராக இருதடவைகள் ஆயதம் ஏந்திய பல்லாயிரம் சிங்கள் இiளுர்கள் அழிந்து விட்டார்கள். ஒரு சமுகத்தின் வளர்ச்சிக்குத் தேவையான 'தனி மனித கொடைகளான' அறிவு, கலை, சமுதாய முன்னேற்ற சிந்தனைகள்,இன ஒற்றுமை, தேசிய உணர்வு,பொது ஈடுபாடு,என்பன சிங்கள தமிழ்த்தலைமையின் ஆழமற்ற அரசியற் கண்ணோட்டஙகளால் பெரும்பாலும் அழிந்து விட்டன.

ஆனால் சுதந்திரம் பெற்ற கால கட்டத்தில்.இலங்கை யரசியலில் மிகவும் 'கெட்டிக்காரர்களில்' ஒருத்தர் என்று பெயர்கொண்ட அன்றைய அரச மந்திரிகளில் ஒருத்தரான பதியுதின் மொகமட் அவர்கள் சிறுபான்மையின மக்களுக்குப் பல நன்மைகள் செய்தார்.

பண்டாரநாயகா அரச காலத்தில்,கிழக்கிலங்கை, மலையக மக்களுக்கான பல பாடசாலைகள் உருவாக்கப் பட்டன. அதிலும் விசேடமாக முஸ்லிம் மக்களுக்குப் பல பாடசாலைகள் மட்டுமல்லாது ஆங்கிலப் படிப்பின் முக்கியத்துத்தையும் அவர் முன்னெடுத்தார். அவர் செய்த நன்மையால்,இன்று முஸ்லிம் மக்கள் சிங்கள. தமிழ் மக்களைவிடப் பன் மடங்கு முன்னேறியிருக்கிறார்கள்.அவர்கள் தங்களையம் தங்கள் சமூகத்தையும முன்னேற்றும் தலைவர்களைப் பெரும்பாலும்; தேர்ந்தெடுப்பதில் திறமையுள்ளவர்களாகவிருக்கிறார்கள்.

ஊழல் நிறைந்த தமிழ் அரசியலில் இன்று.மொழி. இனம் மதம் என்ற போர்வையில் பல புல்லுருவிகள் சில சில்லறைகளை விட்டெறிந்து மக்களின் ஜனநாயக சக்தியான வாக்குரிமையைத் தங்கள் நலன்களுக்கு விலைபேசும் விலைமாதர்களாகிவிட்டார்கள். ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் மக்களின் வாக்கு பலத்தில் உள்ளது என்பதை உணருங்கள்.

இன்று இளம் தமிழ்த் தலைமுறை, தங்களின் நிலையைப் புரிந்து கொள்ளுதல் மிக முக்கியமான விடயமாகும். மந்தை ஆட்கள்போல், மக்களின் நன்மையில் சிறிதளவும் அக்கறையற்ற சுயநலம் பிடித்த சூத்திரதாரிகளான தலைமைளைத் தெரிவு செய்யப் போகிறீர்களா அல்லது, உங்களினதும், உங்கள் சமூகநலத்தினதும் முன்னேற்றத்திலும் அக்கறை கொண்ட ஒரு ' புதிய' சக்திகளைத் தெரிவு செய்யப் போகிறீர்களா என்று உங்கள் இதய சுத்தியுடன் சிந்தியுங்கள்.உங்களது இன்றைய முடிவு நாளைய தமிழ் சமூகத்தின் வளர்ச்சியின் முதற்படி என்பதை நினைவு கூருங்கள்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.