head


முஸ்லிம் பெண்கள் ஃபர்தா அணிவது அவசியம் இல்லை :சௌதி மதகுரு!

|Mon 12th Feb 2018 .08.30Am|| Page Views : 24

சௌதி பெண்கள் முகத்தையும், உடலையும் முழுமையாக மறைக்கும் ஃபர்தா அணியத் தேவையில்லை என்று முதன்மை மதபோதகர்களில் ஒருவரான ஷேக் அப்துல்லா அல் முட்லாக் கூறி உள்ளார்.

பெண்கள் எளிமையான உடைகளை அணியவேண்டும்.

அதற்காக ஃபர்தா அணிய வேண்டும் என்று அர்த்தம் இல்லை என்று கூறியுள்ள அவர் மூத்த அறிஞர்கள் சபையின சௌதி தனது சமூகத்தை நவீனமாக்கவும், பெண்கள் சம்பந்தமான இறுக்கமான சட்டங்களை தளர்த்தவும் முயற்சிகள் மேற்கொண்டுள்ள இந்த சூழலில் மூத்த மத ஆறிஞர் ஒருவர் இவ்வாறாக கூறி உள்ளார்.

இஸ்லாமிய மார்க்கம் மீது பற்று கொண்ட உலகம் முழுவதிலும் உள்ள 90 சதவீத முஸ்லிம் பெண்கள் ஃபர்தா அணிவதில்லை. நாம் பெண்களை ஃபர்தா அணியக் கோரி கட்டாயப்படுத்தக் கூடாது என்கிறார் ஷேக் முட்லாக் இஸ்லாமிய அறிஞர்களிடமிருந்து இது போன்ற குரல் வருவது இதுதான் முதல்முறை.

இது எதிர்காலத்தில் சௌதியில் சட்டமாக மாறலாம்.

ஷேக்கின் இந்த கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் இணையத்தில் மக்கள் எதிர்வினையாற்றி வருகிறார்கள்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.