head


உலகின் மிக உயரமான சொகுசு ஹோட்டல்!

|Tue 13th Feb 2018 10.25AM|General| Page Views : 16

உலகின் மிக உயரமான சொகுசு ஹோட்டல், துபாயில் திறக்கப்பட்டது.

ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய் நகரம், உயரமான கட்டடங்களுக்கு பெயர் பெற்றது. விதவிதமான வித்தியாசமான கட்டடங்களை எழுப்பி, அவர்களின் சாதனையை அவர்களே முறியடித்து வருகின்றனர்.

உலகின் மிக உயர்ந்த கட்டடமான, 'புர்ஜ் கலீபா' துபாயில் உள்ளது. இது, 828 மீட்டர் உயரம் உடையது. இதையடுத்து, உலகின் மிக உயரமான சொகுசு ஹோட்டல், துபாயில் திறக்கப்பட்டது. கெவோரா என்று பெயரிடப்பட்டு உள்ள இந்த ஹோட்டலில், மொத்தம், 75 மாடிகள் உள்ளன. இது, 356 மீட்டர் உயரம் உடையது.

துபாயின் மாரியட் மார்க்விஸ் என்ற நட்சத்திர ஓட்டல், 355 மீட்டர் உயரத்துடன், உலகின் மிக உயரமான ஹோட்டல் என்ற அந்தஸ்தை பெற்றிருந்தது. தற்போது, கெவோரா ஹோட்டல் அந்த பெருமையை தட்டிச் சென்றுள்ளது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.