head


முன்னாள் போராளியை நாடு கடத்தும் அவுஸ்திரேலியா!

|Wed 14th Feb 2018 08.40AM|Political| Page Views : 53

ஐ.நாவின் கோரிக்கைகளையும் நிராகரித்து, விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளி ஒருவரை அவுஸ்திரேலியா அரசாங்கம் இலங்கைக்கு திருப்பி அனுப்பவுள்ளது.

2012ஆம் ஆண்டு படகு மூலம் அவுஸ்திரேலியா சென்றிருந்த சாந்தரூபன் என்பவரே, வரும் 22ஆம் நாள் திருப்பி அனுப்பப்படவுள்ளார்.

அவுஸ்ரேலிய அரசாங்கம் இவரது புகலிடக் கோரிக்கையை நிராகரித்திருந்தது.

எனினும், விடுதலைப் புலிகள் இயக்கத்தில், கடற்புலிகளின் படகுகள் கட்டுமானப் பிரிவில் முக்கிய உறுப்பினராக இருந்த சாந்தரூபன் திருப்பி அனுப்பப்பட்டால், உயிராபத்தை எதிர்கொள்ளலாம் என்று அகதிகளுக்கான ஐ.நா முகவரகம் எச்சரித்திருந்தது.

அவரை திருப்பி அனுப்ப வேண்டாம் என்று ஐ.நா விடுத்திருந்த கோரிக்கையை நிராகரித்து, எதிர்வரும் 22ஆம் நாள் கொழும்புக்கு அனுப்பி வைக்க அவுஸ்திரேலியா நடவடிக்கை எடுத்துள்ளது கடும் பாதுகாப்புடன் அவர் கொழும்புக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளார்.

இதுதொடர்பான அறிவித்தல் சாந்தரூபனுக்கு அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்புப் பிரிவினரால் வழங்கப்பட்டுள்ளது.

சாந்தரூபன் தற்போது அவுஸ்ரேலிய தடுப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.