head


அத்தனகல்ல தொகுதியில் படுதோல்வி: சந்திரிக்கா பிரிட்டன் பயணமானார்!

|Wed 14th Feb 2018 09.18AM|Political| Page Views : 61

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவசரமாக வெளிநாட்டுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

சந்திரிக்கா இங்கிலாந்திற்கு அவசரமாக பயணம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது அத்தனகல்ல தேர்தல் தொகுதியில் அடைந்த படு தோல்வி, சந்திரிக்காவை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்தனகல்ல தேர்தல் தொகுதியில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வெற்றியீட்டியதுடன் இரண்டாம் இடம் ஐக்கிய தேசியக் கட்சியினால் கைப்பற்றிக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.