head


இலஞ்சம் ஊழல் மோசடிகளுக்கு எதிரான மக்கள் வேலைத்திட்டம் ஆரம்பம்!

|Wed 14th Feb 2018 09.25AM|General| Page Views : 55

இலஞ்சம் ஊழல் மோசடி என்பனவற்றிற்கான விரிவான வேலைத்திட்டத்திற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மக்களின் உதவியை கோரியுள்ளார்.

சுபீட்சமான யுகத்தை நோக்கி நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்காக ஊழல் மோசடிகளுக்கு எதிரான சமூகக் கலந்துரையாடல் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதியின் ஊடக இணைப்பு செயலாளர் ரஜித்த கொடிதுவக்கு தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியானர் மகாநாட்டில் ஊடக செயலாளர் உரையாற்றினார்.

அவர் தனதுரையில், நிர்வாகக் கட்டமைப்பை வலுவூட்டுவதும் நீதி வழங்கும் நிறுவனங்களை விரிவுபடுத்துவதும் அவசியமாகும்.

தூய்மையான நாட்டை கட்டியெழுப்புவது ஜனாதிபதியின் நோக்கமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஊழலுக்கு எதிரான யோசனைகளை ஜனாதிபதி செயலகம் எதிர்ப்பார்ப்பதாக நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் அனிர அமரதுங்க தெரிவித்துள்ளார்.

சுபீட்சமான யுகத்தை நோக்கி நாட்டை எடுத்துச் செல்வதற்காக ஊழல் மோசடிகளுக்கு எதிரான சமூகக் கலந்துரையாடல் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதியின் ஊடக இணைப்பு செயலாளர் ரஜித்த கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

ஊழல் மோசடிகள் பற்றிய தகவல்களை அடுத்த மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைக்கலாம்.

முகவரி ஊழலுக்கு எதிரான தேசிய வேலைத்திட்டம், ஜனாதிபதி செயலகம், கொழும்பு 01 என்பதாகும்.

தொலைபேசி இலக்கம் 0112 431 502 என்பதாகும்.

ணநசழஉழசசரிவழைn@pசநளனைநவெளழககiஉந.டம என்ற மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பி வைக்கலாம்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.